உலகம்

ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் – ஐ.நாவில் தீர்மானம்

உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக ஐ.நா. சபையில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. அந்த சிறப்புக்கூட்டத்தில் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. சபையில் இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன. இந்த தீர்மானத்திற்கு எதிராக 5 நாடுகள் வாக்களித்தன. இதன் மூலம் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles