உலகம்

மான்களிடமிருந்து மனிதனுக்கு கொவிட் – கனடா விஞ்ஞானிகள் தகவல்

மான்களிடமிருந்து மனிதனுக்கு கொவிட் பரவும் முதல் சாத்தியமான வழக்கை கண்டுபிடித்துள்ளதாக கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த நவம்பரில் ஒன்ராறியோவில் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது, மேலும் ‘மான்களுடன் நெருங்கிய தொடர்பு’ கொண்ட பெயரிடப்படாத நபர் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

அயோவா ஸ்டேட் யுனிவர்சிட்டியின் முன் அச்சு ஆய்வில் இது வெளிப்பட்டபோதிலும் இன்னமும் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.

நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 இல் 17 வெள்ளை வால் மான்களின் கூட்டத்திற்கு ‘புதிய மற்றும் மிகவும் மாறுபட்ட’ வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

கனேடிய மாகாணத்தின் அதே தென்மேற்குப் பகுதியில் வாழ்ந்த ஒரு நபருக்கு இதே கொவிட் விகாரம் இருப்பது பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

மானிடமிருந்து நோயாளிக்கு எவ்வாறு கொவிட் தொற்றியது என்பதை ஆய்வில் உறுதியாக நிரூபிக்க முடியவில்லை என்றாலும், அது அவர்களின் நெருங்கிய தொடர்பு காரணமாக இருக்கலாம் என்றும், அது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு என்றும் அவர்கள் கூறினர்.

வட அமெரிக்காவின் அதிகமான மான்களுக்கு கொவிட் தொற்று பரவிவிட்டது, சில அமெரிக்க மாநிலங்களில் 80 சதவீத விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான மான்கள் எப்படி வைரஸ் தொற்றுக்குள்ளாகுகின்றன என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மனித மலம் மற்றும் அசுத்தமான குடிநீரின் மூலம் இது பரவி இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Hot Topics

Related Articles