உலகம்

காதலர்தின சட்பொட் மற்றும் லென்ஸ்களை அறிமுகப்படுத்திய Rakuten Viber

காதலர் தினத்தை முன்னிட்டு, நம்பிக்கையுடனான அதிர்வு பிரசாரம், புதிய AR லென்ஸஸ் மற்றும் மனித முன்னேற்றத் திட்டத்தின் கூட்டாண்மையுடன் உறவுமுறையை வழங்கும் Rakuten Viber சன் பிரான்ஸிஸ்கோ, பெப்ரவரி 2022 – குறுஞ்செய்தி பரிமாற்ற தளம் மற்றும் குரலை அடிப்படையான தொடர்பாடல்களில் உலகின் முன்னணியாளராக விளங்கும் Rakuten Viber, தன் பயனர்களுக்கு ஊடாட்டம் நிறைந்த அம்சங்களுடன் காதலர் தின பிரசாரத்தை அங்குரார்ப்பணம் செய்கிறது.

வேடிக்கையான காதலர் தின AR லென்ஸ்கள், மகிழ்ச்சியான குறிப்புகள், உறவு தொடர்பான வினாடி வினாக்களை வழங்கும் சட்பொட் ஆகிய அம்சங்கள் அனைத்தும் நிறுவனத்தின் புதிய “நம்பிக்கையுடனான அதிர்வு” பிரசாரத்துடன் இணைந்து பெப்ரவரி மாதம் முழவதும் வெளியிடப்படுகிறது.

காதலர் தின சலுகைகளின் ஒரு பகுதியாக, உளவியல், நரம்பியல் மற்றும் உறவுகளில் பல ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இலாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனமான மனித முன்னேற்றத் திட்டத்துடன் இணைந்து Rakuten Viber கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.

மகிழ்ச்சிக்கான குறிப்புக்கள் என்ற சட்பொட்டை இருவரும் இணைந்து உருவாக்கி, வினாடி வினாக்கள், வீடியோக்கள் மற்றும் குறிப்பக்களைப் பகிர்ந்துகொள்ளமுடியும்.

காதலர் தின AR லென்ஸ்கள் பெப்ரவரி மாதம் முழுவதும் Viber இனால் வழங்கப்படவுள்ளது.

இந்தப் பிரசாரமானது பதின்மூன்று புதிய லென்ஸ்கள், இருதயத்தின் வடிவத்தைக் கொண்ட கண்ணாடிகள், மன்மதன் உடை, போட்டோபூத் மற்றும் மேலும் பல அம்சங்களைக் கொண்டிருக்கும். தொனிப்பொருளுடன் கூடிய Viber லென்ஸ்கள் என்பன ஸ்னப்சட் மற்றும் ஏனைய Viber தளங்களிலும் கிடைக்கும். அத்துடன், Viber அதன் 44வது மொழியான பெலாருஷ்யன் மொழியைச் சேர்த்துள்ளது – அதிகமான மக்கள் தங்கள் தாய்மொழியில் ஐ லவ் யூ என்று கூறுவதை எளிதாக்குகிறது.


உலகெங்கிலும் உள்ள மக்கள் எங்கிருந்தாலும், நம்பிக்கையுடன் இணைவதற்கும், அன்பான, நீடித்த உறவுகளை உருவாக்குவதற்கும் உதவுவதில் Rakuten Viber உறுதியாக உள்ளது.

Viber குறுஞ்செய்திகளை தளம் பயனர்கள் ஒருவரையொருவர் இணைக்கவும், காதல் மாதம் முழுவதும் தங்களை வெளிப்படுத்தவும் உதவுகிறது.

நிறுவனத்தின் “நம்பிக்கையுடனான அதிர்வு” பிரச்சாரம் மக்களை நெருக்கமாக்கும், பயனர்கள் தங்கள் குரல் அல்லது உடனடி வீடியோ செய்திகளின் மூலம் குறிப்பிடத்தக்க மற்றவர்களுக்கு தங்களை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.

Viber இல் தனிப்பட்ட மற்றும் குழு அரட்டைகள் குறியாக்கம் செய்யப்பட்டிருப்பதால், பயன்படுத்துனர்கள் தங்கள் தகவல்தொடர்புகள் எப்போதும் தனிப்பட்டதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்யலாம்.

“காதலர் தினம் என்பது ஒருவரையொருவர் இணைத்துக்கொள்வதற்கும், உங்களுக்கு அக்கறை காட்டுவதற்கு நேரம் ஒதுக்குவதற்கும் ஆகும், சில சமயங்களில் அது ஒரு செய்தியிடல் செயலியின் மூலமாக இருக்க வேண்டும்.” Rakuten Viber இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் நோயா பொல்லாக், சீனியர் தெரிவித்தார். “தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட குழப்பத்தினால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, பல குடும்பங்கள் மற்றும் பங்குதாரர்கள் ஒருவரை ஒருவர் நேரில் பார்க்க முடியவில்லை, இதனால் Viber பயனர்கள் தங்கள் அன்பை தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை உருவாக்க விரும்புகின்றோம். இதனாலேயே எமது வீடியோ செய்திகள் மற்றும் ஒலி வடிவிலான செய்திகள் முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன” என்றார்.

Rakuten Viber பற்றி :

Rakuten Viber நாங்கள் மக்களை இணைக்கிறோம். அவர்கள் யார், அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. எங்கள் உலகளாவிய பயனர் தளம் ஒருவருக்கொருவர் அரட்டைகள், வீடியோ அழைப்புகள், குழு செய்தி அனுப்புதல் மற்றும் அவர்களுக்கு பிடித்த வர்த்தகநாமங்கள் மற்றும் பிரபலங்களுடன் புதுப்பிப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல அம்சங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. எங்கள் பயனர்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான மற்றும் இலவச சூழல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.

Rakuten Viber, Rakuten Inc இன் ஒரு பகுதியாகும். ஈ-வர்த்தகம் மற்றும் நிதிச் சேவையில் உலகின் முன்னணியாளராகும். இது FC Barcelona வின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சனல் என்பதுடன் Golden State Warriors அதிகாரப்பூர்வ உடனடி செய்தி மற்றும் அழைப்பு பயன்பாட்டுப் பங்காளராகும்.

Hot Topics

Related Articles