உலகம்

விஷால் ரசிகர்களுக்கு சோகமான செய்தி

லத்தி படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில், லத்தி படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது எனக்கு உடலில் நிறைய இடங்களில் காயம், எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக கேரளம் செல்கிறேன். இறுதிகட்டப் படப்பிடிப்பு வருகிற மார்ச் முதல் வாரத்தில் துவங்குகிறது. அப்போது படக்குழுவினருடன் மீண்டும் இணைவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

லத்தி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார். வினோத் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பாலசுப்பரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

Hot Topics

Related Articles