உலகம்

5 – 15 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி எப்போது?

மருத்துவ நிபுணா் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டபின்னரே 5 – 15 வயது வரையான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

மருத்துவ நிபுணா்களின் பரிந்துரைகளைப் பின்பற்றியே நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் கடந்த மாதம் அமல்படுத்தினோம்.

5 முதல் 15 வயதுக்கு உள்பட்ட சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக மருத்துவ நிபுணா் குழுவிடம் இருந்து இதுவரை எந்தப் பரிந்துரையும் வரவில்லை.

இது, அரசியல் ரீதியில் எடுக்கப்படும் முடிவு அல்ல. அறிவியல்பூா்வமாக எடுக்கப்படும் முடிவு. அவா்களிடம் இருந்து பரிந்துரை வந்த பிறகு 5 முதல் 15 வயதுக்கு உள்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.

நாடு முழுவதும் 96 சதவீதம் போ் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். 77 சதவீதம் போ் இரு டோஸ்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதனால் கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க முடிந்தது. 15-18 வயதுக்கு உள்பட்டவா்களில் 75 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா் என்றாா்

Hot Topics

Related Articles