மணமேடையில் உயிரிழந்த மணமகள் – உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்!

இந்தியா -கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் பகுதியில், திருமணக் கோலத்தில், மணமகனுடன் புகைப்படங்களுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருந்த மணமகள், திடீரென மயங்கி விழுந்து பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.

மணமகள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவடைந்துவிட்டதாகக் கூறிவிட்டார்.

திருமண வீடே சோகத்தில் மூழ்கியது. தனது மகள், தங்களை விட்டுப் பிரிந்து கணவர் வீட்டுக்குச் செல்லப் போகிறார் என்பதையே தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு, மகள் தங்களை விட்டு நிரந்தமாக போய்விட்டாள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமலும் அவர்களைத் தேற்ற முடியாமல் உறவினர்களும் பரிதவித்தனர்.

இந்த நிலையிலும், தங்களது மகளின் மரணம் ஒரு முடிவாக இருக்கக் கூடாது, பல உயிர்களின் துவக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்த அவரின் பெற்றோர் தங்களது மூளைச்சாவடைந்த பெண்ணின் முக்கிய உடல் உறுப்புகளை தான மளிக்க முன் வந்தனர்.

மகளை இழந்த நேரத்திலும் அந்த பெற்றோர் எடுத்த முடிவு பலரும் தங்களது ஆதரவையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.

திருமண நாளில் மணப்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *