இந்தியாவில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக வாங்கப்பட்டார்.
ஹக் எட்மீட்ஸின் ஏலத்தின் போது, 10.75 கோடி ரூபாவுக்கு (இந்திய ரூபாய்) வனிந்து ஹஸரங்க ஏலம் கேட்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆரம்பித்திருந்த ஏலத்தில் அதே தொகைக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார்.
இலங்கை வரலாற்றில் ஐ.பி.எல். ஏலத்தில் அதிகவிலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஐ.பி.எல். வீரர்கள் ஏலத்துக்காக இலங்கை அணியைச்சேர்ந்த 36 வீரர்கள் விண்ணப்பித்திருந்தனர் அவர்களில் எல பட்டியலில் 23 வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
எனினும் இதுவரையில் வனிந்து ஹஸரங்கவின் பெயர் மாத்திரமே ஏலத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெறவுள்ள இலங்கை வீரர்களின் முழு விபரம்
வனிந்து ஹஸரங்க
துஷ்மந்த சமீர
மஹீஷ் தீக்ஷன
சரித் அசலங்க
நிரோஷன் டிக்வெல்ல
குசல் மெண்டிஸ்
குசல் பெரேரா
அகில தனன்ஜய
பானுக ராஜபக்ஷ
மதீஷ பதிரண
அவிஷ்க பெர்னாண்டோ
பெதும் நிஸ்ஸங்க
சாமிக்க கருணாரத்ன
தசுன் ஷானக
கெவின் கொத்திகொட
திசர பெரேரா
லஹிரு குமார
இசுரு உதான
தனுஷ்க குணதிலக்க
தனன்ஜய லக்ஷான்
சீகுகே பிரசன்ன
துனித் வெல்லாலகே