உக்ரைன் – ரஷியா போர் பதற்றம் அதிகரித்து வருவதால் உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அங்கு தங்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை பல்வேறு உலக நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜோர்டான் உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளன.
உக்ரைனில் ரஷியா தனது படைகளை குவித்துள்ளதனால், உக்ரைன் மீது ரஷியா எந்த நேரமும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கும் ஆதரவளிப்போம் என நேட்டோ மற்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளன.
இதனால், ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் நிறைவடைந்த உடன் (பிப்.20) உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் உள்ள தங்கள் தூதர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் திரும்ப அழைத்துள்ளன.