உலகம்

தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்த கோரிக்கை!

தமிழக மீனவர்களின் 100க்கும் மேற்பட்ட படகுகளை இலங்கை ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவசரமாகத் தலையிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மீனவர்களின் 105 படகுகளை பிப்ரவரி 7 முதல் 11ம் தேதி வரை ஏலம் விடுவதற்கான நடவடிக்கையை இலங்கை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இலங்கை ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதும், கலந்தாலோசிக்காமல் ஏலத்தை மேற்கொள்வதும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் தமிழக அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும் என அவர் கூறியுள்ளார்.

ஏலம் விடுவதைக் கண்டித்து இன்று ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles