வத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடவளை, மடிகே பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததல், மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளதுடன், சரிந்து விழும் அபாயத்தில் இருந்த மண்மேடுக்கு மதில் அமைத்த ஐவருள் மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அங்கு வேலை செய்துக்கொண்டிருந்த ஐவரும் மண்ணில் புதையுண்ட நிலையில், இருவர் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.