நைஜீரியா கடற்பரப்பில் இரண்டு மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றும் திறன் கொண்ட மிகப்பெரிய எண்ணெய்க் கப்பல் வெடித்துச் சிதறியுள்ளது.
நைஜர் டெல்டா நதிக்கு அருகில் உள்ள உக்போகிடி எண்ணெய் வயலில் டிரினிட்டி ஸ்பிரிட்டில் நெருப்பு எரிவதையும், அடர்த்தியான புகை மூட்டம் எழுவதையும் காட்சிகள் காட்டுகின்றன.
இந்த கப்பலில் பத்து பணியாளர்கள் இருந்தனர். இவர்கள் மீட்கப்பட்டதற்கான எந்த தகவலும் வெளியாக வில்லை.
ரிசீவர்ஷிப்பில் உள்ள நிறுவனமான ஷெபா எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்ஷன் கம்பெனி லிமிடெட் (SEPCOL)-க்கு சொந்தமான எண்ணெய் சேமிப்புக் கப்பல் வெடித்ததற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.