வடக்கு மொராக்கோவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் 32 மீட்டர் ஆழமுள்ள குழாய் கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுவன் மீட்பு குழுவினரின் நீண்ட நாள் முயற்சியின் போதும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளமை பெறும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரியான் என்ற குறித்த சிறுவன் கடந்த செவ்வாய்கிழமை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அவரை மீட்க பாதுகாப்பு படையினரும் மீட்புக்குழுக்களும் போராட்டத்தை மேற்கொண்டன.
இலங்கை நேரப்படி அதிகாலை 2.10 மணியளவில், மிட்புக் குழுக்கள் ரியானை இருண்ட குகையிலிருந்து வெளியே எடுத்தனர்.
கிட்டத்தட்ட கிணற்றில் விழுந்த . ஐந்து நாட்கள் அல்லது 100 மணி நேர கடின போராட்டத்தின் பின்னர் பிறகு, அவர்கள் போரில் தோற்றனர்.
மீட்பு குழுவினரால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
நிவாரணக் குழுக்கள் 32 மீட்டர் ஆழமுள்ள குழாய் கிணற்றுக்கு இணையாக சுரங்கம் தோண்டத் தொடங்கின. பின்னர் அவர்கள் ரியானை அடைய ஒரு கிடைமட்ட சுரங்கப்பாதையை தோண்டினர்.
அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.ரியானின் பெற்றோர் ஆம்புலன்சில் காத்திருந்தனர்.
சுமார் 100 மணிநேரம் கிணற்றில் சிக்கியிருந்த ரியானை பல்வேறு தடைகளையும் மீறி பாதுகாப்பு படையினரும், நிவாரணக் குழுக்களும் சென்றடைந்தன. ஆனால் அப்போதும் லட்சக்கணக்கான மக்கள் கண்ணீருடன் ரியான் உலகை நீங்கியிருந்தார்.