உலகம்

இனி முகக்கவசம் அணிந்தபடி உணவு உண்ணலாம் -தென்கொரியாவின் புதிய கண்டுபிடிப்பு!

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக முகக்கவசம் அணிவது உலக அளவில் முக்கியமாகியுள்ளது.

எனினும் முக கவசம் அணிந்து கொண்டு பல சாதாரண செயல்களைச் செய்வதும் சிரமமான ஒன்றாக மாறி உள்ளது.

இதன் காரணமாக விதவிதமான முகக்கவசங்கள் வடிவமைக்கப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அந்த வகையில் மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான முக கவசம் ஒன்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய வகையான மூக்கு கவசத்திற்கு ‘கோஸ்க்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மூக்கு கவசத்தை தென்கொரியாவைச் சேர்ந்த அட்மன் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

மூக்கு என பொருள் தரும் ‘கோ’ என்ற கொரியன் சொல்லையும் மாஸ்க் என்ற ஆங்கில சொல்லையும் இணைத்து இந்த மூக்கு கவசத்திற்கு கோஸ்க் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சாப்பிடும்போது மற்றும் அருந்தும்போது மூக்கை மட்டும் மூடிக்கொண்டு சாப்பிட வசதியாக இந்த மூக்கு கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முகக்கவசம் அடிக்கடி முக கவசத்தை கழற்றி வைப்பதால் ஏற்படும் கிருமி பரவலைத் தடுக்கின்றது.

Hot Topics

Related Articles