உலகம்

2 மடங்கு வேகமாக நோய்வாய்ப்படுத்தும் சூப்பர்-விகாரி எச்ஐவி வைரஸ் கண்டுபிடிப்பு!

தற்போதைய எச்ஐவி வைரஸ் பதிப்புகளை விடவும் இரண்டு மடங்கு வேகமாக நோய்வாய்ப்படுத்தும் புதிய சூப்பர்-விகாரி எச்ஐவி விகாரம் நெதர்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, புதிய விகாரி – VB மாறுபாடு – குறைந்தது 109 பேரை இதுவரை பாதித்துள்ளது.

இந்த திரிபு நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்துகிறதுவதோடு வைரஸின் முந்தைய பதிப்புகளை விட வேகமாக ஏனைய நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் ஒரு நபரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது.

இந்த விகாரம் தொற்றுக்குள்ளான நபர்கள் எய்ட்ஸ் நோயை விரைவாக பரப்ப முடியும்.

VB மாறுபாடு தற்போதைய விகாரத்தை விட 3.5 மற்றும் 5.5 மடங்கு அதிகமாக வைரஸ் பரவும் திறனை கொண்டுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு வைரஸை பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இருப்பினும், சிகிச்சையைத் தொடங்கிய பிறகு, பிற எச்.ஐ.வி விகாரங்களால் பாதிக்கப்பட்டவர்களை ஒத்த நோயெதிர்ப்பு அமைப்பு முன்னேற்றம் அடைகின்றது.

ஆனால் VB தொற்றின் பிறகு விரைவான உடல்நலக் குறைவு ஏற்படுவதை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பது ‘முக்கியமானது’ என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

 

Hot Topics

Related Articles