உலகம்

18 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவை சந்தித்துள்ள பேஸ்புக்!

Photo by Luca Sammarco from Pexels


உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை 18 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்துள்ளதாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கு டிக்டாக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுடனான போட்டியே காரணம் என கூறியுள்ள மெட்டா, இதன் காரணமாக விளம்பரதாரர்களும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக செலவிடும் தொகையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நியூயார்க் பங்குச்சந்தையில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மெட்டா மட்டும் இல்லாமல் ட்விட்டர், ஸ்னாப்சேட், பின்ட்ரஸ்ட் போன்ற சமூக வலைதளங்களின் பங்கு மதிப்பும் குறைந்துள்ளது.

தற்போது மார்க் ஜுக்கர்பெர்க் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருவதால் மெட்டா நிறுவனம் பிற சமூக வலைதளங்களுடனான போட்டியை குறைத்துள்ளது.

Hot Topics

Related Articles