உலகம்

பிபிசியின் பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

பிபிசியின் ஸ்டேசி டூலியின் புதிய சமையல் நிகழ்ச்சியான “ஹங்கிரி ஃபார் இட்” நிகழ்ச்சி தொகுப்பின் போது பெண் பிபிசி பணியாளர் ‘பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக’ சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் 10, 2021 வெள்ளிக்கிழமை அன்று பிபிசி த்ரீ தொலைக்காட்சி நிகழ்ச்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது குறித்தப் பெண் தங்கியிருந்த அறையில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு மற்றொரு குழு முறைப்பாடு அளித்ததாகவும், ‘வழக்கின் ஆதாரங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும்’ லண்டன் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

பிபிசி ஸ்டுடியோஸ், ஹங்கிரி ஃபார் இட் நிகழ்ச்சி தயாரிப்பு குழு, இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.

ஆனால் அவ்வாறு பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களுக்கு ‘பொருத்தமான உதவிகளை’ வழங்குவதற்கான ‘வலுவான செயல்முறைகள்’ தமது நிறுவனத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

Hot Topics

Related Articles