நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதில்லை என பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொரளை தேவாலயத்தில் இடம்பெற்ற கைக்குண்டு சம்பவம் தொடர்பில் அப்பாவி மக்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று காலை கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அருட்தந்தை சிறில் காமினி இதனைத் தெரிவித்தார்.