உலகம்

கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவருவருக்கு கொலை அச்சுறுத்தல் – அதன் பின்னணியில் நடந்தது என்ன?

கிளிநொச்சி – தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 1% மாணவர்களுக்கு கண் பாதிப்பு என வெளியான செய்தியின் பின்னணியில் இருந்த கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைது செய்யப் பட்டுள்ளதுடன், சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளதாக  கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு செயலாளர் சிங்கராஜா ஜீவாநந்தம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனை மேற்கொண்ட தனியார்கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 1% மாணவர்களுக்கு கண்பாதிப்பு உண்டு எனத் தெரிவித்திருந்தமையை ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கிளிநொச்சி சுகாதார பிரிவின் மருத்துவர் பிரியந்தினி உள்ளிட்ட குழு இது தொடர்பில் ஆராய்ந்து மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் பின்னால் செயற்பட்டவர்களை சட்டத்திற்குமுன் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நடவடிக்கையில் ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, கண்ணில் குறைபாடு உள்ளதாக பொய்யான செய்தி பரப்பப்பட்டமையும் அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என , ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்தமையும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவர் பிரியந்தினி கமலசிங்கத்துக்கு தொலைபேசியில் சிலர் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வைத்தியர் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில் மருத்துவரை தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைதுசெய்யப்பட்டதுடன், சந்தேக நபரை விளக் கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கண்டாவளை மருத்துவ அதிகாரி பிரிவின் மருத்துவ அதிகாரி பிரியந்தினி கமலசிங்கம். துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களையும், ஒத்துழைப்பின்மையையும் பொதுவெளியில் பகிர்ந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழு செயலாளர் சிங்கராஜா ஜீவாநந்தம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

 

Hot Topics

Related Articles