உலகம்

இந்தியாவில் 31 தனிநபர்கள், பயங்கரவாதிகளாக அறிவிப்பு!

இந்தியாவின் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டத்தின் நான்காவது அட்டவணையின்படி, 31 தனிநபர்கள், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர்,
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம், 1967, முதல் அட்டவணையில், நாட்டில் உள்ள 42 பயங்கரவாத அமைப்புகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன், இவற்றில் 13 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தின் நான்காவது அட்டவணையின்படி, இதுவரை, 31 தனிநபர்கள், பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய- மாநில அரசுகளின் சட்ட அமலாக்க அமைப்புகள், இதுபோன்ற அமைப்புகள் / தனிநபர்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து, சட்டத்தின்படி அவற்றின்மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் தலைவர்கள்/உறுப்பினர்கள் பயங்கரவாதிகளாக அறிவிப்பதற்கான சட்டப்பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு)ச் சட்டம், 2019-ல் சேர்க்கப்பட்டுள்ளது. என்றார்.

Hot Topics

Related Articles