அர்ஜென்டினாவில் போதைப்பொருளை உட்கொண்ட 16 பேர் மரணம்!

Photo by Ninetyseven Imagery from Pexels


அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் போதைப்பொருளை உட்கொண்ட 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 50பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த குழு கொக்கைன் போதைப்பொருளை உட்கொண்டதாகவும் அதில் விஷப் பொருள் இருந்ததாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருளை கொள்வனவு செய்து தம்வசம் வைத்திருப்பவர்கள் இருப்பின் அவற்றை பயன்படுத்துவதை தவர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற அதே குடிசைப்பகுதியில் போதைப்பொருள் வாங்கப்பட்டதாகவும், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் இலங்கை பாதுகாப்புப் படையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Author: Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *