உலகம்

BCCS விருதுகள் 2021 இல் இரண்டாமிடத்தை CDB சுவீகரிப்பு

 

  • தொடர்ச்சியான நான்காவது வருடமாகவும் சிறந்த பத்து கூட்டாண்மை குடிமகன் விருதுகளில் ஒன்றாக தெரிவு
  • மூன்று பிரிவு விருதுகளையும் வெற்றியீட்டியிருந்தது

 

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) நிறுவனத்தின் People.Planet.Profit கொள்கைக்கான அர்ப்பணிப்புக்கான கௌரவிப்பாக சிறந்த கூட்டாண்மை குடிமகன் விருதுகள் வழங்கும் நிகழ்வில் மொத்தம் ஐந்து விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு நிலைபேறாண்மை அடிப்படையையும் பின்பற்றும் CDB, 15 பில்லியன் ரூபாய் வருடாந்த புரள்வுக்கு அதிகமான தொகையை பதிவு செய்யும் நிறுவனங்கள் மத்தியில் ஒட்டுமொத்த இரண்டாமிட விருதை சுவீகரித்திருந்தது.

 

மேலும், தொடர்ச்சியான நான்காவது தடவையாக சிறந்த பத்து கூட்டாண்மை குடிமகன் விருதுக்காக CDB தெரிவு செய்யப்பட்டிருந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காலப்பகுதியில் நிறுவனம் பின்பற்றியிருந்த சிறந்த செயன்முறைகளுக்காக, Demonstrated Resilient Practices during COVID19 கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது. சிறந்த அணிச் செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் ஊழியர் உறவுகள் பிரிவின் விருதையும், CDB இன் ஆக்கத்திறனை வெளிப்படுத்தியிருந்தமைக்காக Best Presentation of an Application விருதும் வழங்கப்பட்டிருந்தது.

 

CDB பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான மஹேஷ் நானயக்கார கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டில் வழங்கப்பட்ட ஒவ்வொரு ஐந்து விருதுகளும் எமக்கு மிகவும் விசேடமானதாக அமைந்திருந்தது. ஏனெனில் இந்த விருதுகளினூடாக நிலைபேறாண்மையை பின்பற்றியிருந்த இலங்கையின் கூட்டாண்மை நிறுவனங்கள் கௌரவிக்கப்படுகின்றன. 26 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த எமது பயணம் மிகவும் எளிமையானதாக அமைந்திருந்ததுடன், கடினமானதாகவும் இருந்தது. ஆனாலும், இன்று நிதிச் சேவைகள் துறையில் நாம் முன்னோடிகளாகத் திகழ்வதுடன், நாட்டின் சிறந்த ஐந்து வங்கிசாராத நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளோம். எமது அணியினர் பல சவால்களுக்கு மத்தியிலும் கைகோர்த்து, எமது வருமானத்தையும் இலாபத்தையும் அதிகரிப்பதற்கு செயலாற்றுவதை நாம் அவதானித்திருந்தோம்.” என்றார்.

 

CDB இன் பயணம் என்பது தொடர்ச்சியாக நிலைபேறாண்மை மற்றும் தொழில்நுட்ப புரட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. “எமக்கு பெறுபேறுகளை பதிவு செய்வது என்பது மாத்திரம் இலக்கல்ல. கூட்டாண்மை வழிமுறைகளின் பிரதான கொள்கைகளை எமது வியாபார தந்திரோபாயத்தில் உள்வாங்கி இயங்குவதில் கவனம் செலுத்துகின்றோம். இதன் காரணமாக நிலைபேறாண்மை என்பது எமது வியாபாரத்தின் பிரதான மூலோபாயத்தில் எப்போதும் உள்வாங்கப்படும் உள்ளம்சமாக அமைந்துள்ளது.” என்றார்.

 

People.Planet.Profit உடன் தொடர்புடைய ஒவ்வொரு கொள்கையுடனும் தொடர்புடைய பாரம்பரிய வியாபார விதிமுறைகளுக்கு அப்பால் CDB க்கு கவனம் செலுத்துவதற்கு இந்த நிலைபேறாண்மை மற்றும் தொழில்நுட்ப புரட்சி போன்றன தூண்டியிருந்தன. எதிர்பார்ப்புகள் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி CDB நகரும் நிலையில், குறைந்த காபன் வெளியீட்டைக் கொண்டு செயலாற்றுவதுடன், சமூகத்தில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் நிறுவனம் எனும் வகையில், காபன் நடுநிலை என்பதை நோக்கிய தனது நகர்வை தொடர்ந்திருந்தது. CDB’இன் தொழில்நுட்ப மூலோபாயம் என்பது, அதன் நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிப்பதாக அமைந்திருப்பதுடன், அதன் விரிவாக்கத்துக்கு கைகொடுத்து, அதிகளவு வளங்கள் வினைத்திறனான நிறுவனமாக திகழ பங்களிப்பு வழங்குகின்றது. இந்த தொழில்நுட்ப கவனம் செலுத்துகை என்பதனூடாக CDB க்கு, மிகவும் பின்தங்கிய, இலகுவில் பாதிப்புறக்கூடிய மற்றும் கிராமிய சந்தைகளைச் சென்றடைந்து, நிதி உள்ளடக்கத்தை வகைப்படுத்திக் கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது.

 

CDB இன் நிலைபேறாண்மை மற்றும் திறன் முகாமைத்துவ பிரிவின் தலைமை அதிகாரி அரோஷி ரணதுங்க கருத்துத் தெரிவிக்கையில், “CDB தனது கூட்டாண்மை நிகழ்ச்சி நிரலில் இரு தந்திரோபாய தூண்களைக் கொண்டுள்ளது. அதில் காபன் நடுநிலையாக செயலாற்றுவது, 2030 ஆம் ஆண்டளவில் சமூக அக்கறையுடனான முன்னேற்றங்களை நோக்கி நகர்வதற்கு பங்களிப்பு வழங்குவது மற்றும் நிலைபேறான நிதியாண்மை துறையில் முன்னோடியாக அமைந்திருப்பது போன்றன உள்ளடங்கியுள்ளன. கல்வி, சுகாதாரம், நீர், தூய வலு, பொறுப்பு வாய்ந்த நுகர்வு, நிலத்தில் வாழ்க்கை மற்றும் பங்காண்மை ஆகிய, ஏழு UNSDGக்கு முன்னுரிமையளித்து எட்டு பிரிவுகளை நிறுவியுள்ளோம். எமது எட்டு பிரிவுகளும் புதுப்பிக்கத்தக்க வலு அடிப்படையிலான தீர்வுகளை வழங்குவது, பகிரப்பட்ட பொருளாதாரத்தை செயற்படுத்துவது, உயிரியல் பரம்பலுக்கு பங்களிப்பு வழங்குவது மற்றும் பாதுகாப்பு, நிதி உள்ளடக்கம், சமூக தாக்கம் வகிக்கும் செயற்பாடுகள், ஈடுபாட்டுடனான அர்த்தமுள்ள அணி அங்கத்தவர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்த மற்றும் நிலைபேறான வர்த்தக நாமம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.” என்றார்.

 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “கூட்டாண்மை முன்னோடி எனும் வகையில், வழியமைப்பது, மனநிலையை மாற்றுவது மற்றும் எல்லைகளை தூண்டுவது போன்றவற்றில் கவனம் செலுத்துவது எமது பொறுப்பாக அமைந்துள்ளதுடன், எதிர்கால சந்ததிக்கு உயிர் வாழக்கூடிய புவியை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். பின்தங்கிய பிரதேசதங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு எமது அணியில் அங்கம் பெறுவதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்தியிருந்தோம். இதில் பட்டதாரிகளும் அடங்குகின்றனர். எமது வியாபார அடிப்படைகளில் சூழலுக்கு நட்பான உளநிலையை ஏற்படுத்தியிருந்தமை தொடர்பில் நாம் திருப்தியடைகின்றோம். இதன் காரணமாக, மதிநுட்பமான மற்றும் நிலைபேறான இலங்கைக்கான எமது பயணம் என்பதில், CDB துரிதமாக முன்நோக்கி நகர்ந்து வருவதுடன், சாதாரண நபர்களினூடாகவும் மிகச் சிறந்த பெறுபேறுகளை எய்த முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.” என்றார்.

 

 

Hot Topics

Related Articles