உலகம்

பெண்ணை வன்கொடுமைக்கு உட்படுத்தி செருப்பு மாலையுடன் வீதியில் அழைத்துச்சென்ற குடும்பம் – டெல்லியில் கொடூரம்!

இந்தியா, கிழக்கு டெல்லியின் கஸ்தூர்பா நகர் பகுதியில் 20 வயது பெண் ஒருவரை ஆண்களும் பெண்களும் கடத்திச் சென்று அறைக்குள் அடைத்து வைத்து அடித்து பாலியல் வன்கொடுமைக்கு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய ஆண்களில் இரண்டு சிறார்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை மொட்டையடித்து, முகத்தில் கருப்பு மை பூசி அவளின் கழுத்தில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, அந்தப் பகுதியின் பாதைகள் வழியாக அவள் அழைத்துசெல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு குறித்த பெண்ணை கொடூரமாக அவமானப்படுத்தியுள்ள குடும்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கடந்த நவம்பர் மாதம் ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொன்டுள்ளார்.

அவரின் மரணத்திற்கு குறித்த பெண் காரணம் என சந்தேகிக்கும் குறித்த குடும்பம் அதற்கு பலிதீர்க்கும் வகையில் இவ்வாறு குறித்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக 9 பெண்கள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இது தொடர்பில் பலரும் #DelhiRapeVictim என்ற ஹேஸ் டெக் மூலம் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Hot Topics

Related Articles