பெண்களுக்கான ஆகக்குறைந்த திருமண வயதை 21 அல்லது 25 ஆக மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம் பெண்கள் அமைப்பு ஒன்று ஒரு நாடு ஒரு சட்டம்” ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளதாக தெரிய வருகின்றது.
முஸ்லிம் பெண்கள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி, டொக்டர் மரினா ரிஃபாய் மற்றும் ஊடகவியலாளர் சுபா காசிம் உள்ளிட்ட குழுவினரே இந்த யோசனையை முன்வைத்துள்ளனர்.
பெண்கள் திருமணம் செய்துக்கொள்ளும் ஆகக்குறைந்த வயது 21ஆக திருத்தியமைக்கப்பட வேண்டும் என டொக்டர் மரீனா ரிஃபாய் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பெண்களின் திருமண வயது 25ஆக சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் ஊடகவியலாளர் சுபா காசிம் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்த கோரிக்கையில் காதி நீதிமன்ற முறைமை நடைமுறையில் காணப்படும் குறைபாடுகள் திருத்தப்பட வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறிப்பாக தகுதியில்லாதவர்கள் காதி நீதிமன்றத்திற்கு நியமிக்கின்றமை பிரச்சினைக்குரியது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.