உலகம்

புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

காலியில் இன்று (பிப்ரவரி 01) முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

காலி, பூஸ்ஸ, ரிலம்ப சந்தியில் புகையிரத கடவையில் பயணித்த முச்சக்கரவண்டி இன்று (01) காலை 10.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது தாய், தந்தை, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த அவர்கள் அனைவரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Hot Topics

Related Articles