பெப்ரவரி மாதம் 4ம் திகதி வரை மின்சார விநியோக தடைக்கு அனுமதி வழங்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்திற்குள் மின்சார தேவையை முகாமைத்துவம் செய்துக்கொள்ள முடியும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
மின்சார தடை ஏற்படுத்தப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தாம் ஆராய்ந்ததாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு கிடைக்கும் எரிபொருள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததாகவும், அதனூடாக மின் தடை ஏற்படுத்த அனுமதி வழங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மறு அறிவித்தல் வரை மின் துண்டிப்புக்கு இடமளிக்க முடியாது என ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.