உலகம்

‘நியோகோவ்வால் பாதிக்கப்பட்டவா்களில் 3 இல் ஒருவா் உயிரிழக்கும் அபாயம் – வூஹான் நிபுணா்கள் எச்சரிக்கை!

தென்னாப்பிரிக்காவில் உள்ள வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸான ‘நியோகோவ்’, எதிர்காலத்தில் மனிதா்களுக்குப் பரவும் வாய்ப்புள்ளதாகவும் பாதிக்கப்பட்டவா்களில் 3 இல் ஒருவா் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் வூஹான் நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

இது தொடா்பாக ரஷியாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘‘நியோகோவ் வைரஸானது மொ்ஸ் வகை கொரோனா தீநுண்மி வகையைச் சோ்ந்தது. நியோகோவ் வைரஸ் தென்னாப்பிரிக்காவில் உள்ள வௌவால்களில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது வரை விலங்குகளிடையே மட்டுமே வைரஸ் பரவி வருகிறது.

ஆனால், எதிர்காலத்தில் மனிதா்களுக்கும் இந்த கொரோனா பரவ வாய்ப்புள்ளதை வூஹான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.

தற்போதைய சூழலில், இன்னும் ஒரே ஒருமுறை உருமாற்றம் பெற்றால், நியோகோவ் வைரஸ் மனிதா்களுக்குப் பரவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு மனிதா்களிடம் பரவினால் அதன் பரவல் வேகம் அதிகமாக இருக்குமென்றும், பாதிக்கப்பட்டவா்களில் 3 இல் ஒருவா் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் ஆராய்ச்சியாளா்கள் எச்சரித்துள்ளனா்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நியோகோவ் வைரஸ் குறித்து மேலும் ஆராயப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “நியோகோவ் வைரஸ் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால், மனிதர்களுக்கு அது ஆபத்து ஏற்படுத்துமா என்பது பற்றி தெரிந்து கொள்ள நியோகோவ் குறித்து நிறைய ஆராய வேண்டும்.

பெரும்பாலான நேரங்களில் இம்மாதிரியான வைரஸ் பரவ எளிதான ஆதாரமாக உள்ள வௌவாலில் உள்ளிட்ட விலங்குகளிலிருந்துதான் கொரோனா வைரஸ் கண்டறியப்படுகிறது.

இம்மாதிரியாக விலங்குகளிலிருந்து எளிதாக பரவக்கூடிய வைரஸை எதிர்கொள்ள தொடர்ந்து பணியாற்றிவருகிறோம். சீன ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆராய்ச்சியை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles