உலகம்

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை குவித்தது ‘ஜெய் பீம்’

50 க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் திரைப்படங்கள் போட்டியிட்ட  9-வது நொய்டா சர்வதேச திரைப்பட நேற்று நடைபெற்றது.

இதில், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சூர்யாவும், சிறந்த நடிகை என மூன்று விருதுகளை ‘ஜெய் பீம்’ குவித்துள்ளது.

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் ‘ஜெய் பீம்’ வெளியான  பெரும் வரவேற்பைப் பெற்று பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

தா.செ ஞானவேல் இயக்கிய இப்படம் ஏற்கனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுக்கொண்டு வரும் நிலையில், சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான ஆஸ்கர் விருது தகுதிப் பட்டியலிலும் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles