உலகம்

நபியின் கேலிச்சித்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பிய பெண்ணை சாகும் வரை தூக்கிலிட நீதிமன்றம் தீர்ப்பு!

(Photo by Janko Ferlic from Pexels)

முகமது நபியின் கேலிச்சித்திரத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியதற்காக முஸ்லிம் பெண்ணுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் புதன்கிழமை மரண தண்டனை விதித்துள்ளது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக ‘முகமது நபியின் நிந்தனையான விஷயங்களை’ பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அனீகா அதீக், 26, மே 2020 இல் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை மாற்றுமாறு அவளுடைய தோழி அவளை வற்புறுத்தியபோது, ​​அதற்குப் பதிலாக அனீகா அதீக் அந்தன் பொருளை தோழிக்கு அனுப்பியுள்ளார்.

முகமது நபியின் கேலிச்சித்திரங்கள் இஸ்லாத்தால் தடைசெய்யப்பட்டவை.

மத நிந்தனை என்பது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கக்கூடிய ஒரு செயலாகும், இருப்பினும் இந்த குற்றத்திற்காக மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.

குறித்த பெண்ணுக்கு ‘இறக்கும் வரை அவள் கழுத்தில் தூக்கிலிடப்பட வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின்படி, பாகிஸ்தானில் 80 பேர் வரையில் இவ்வாறான குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பாதி பேர் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையை எதிர்கொள்கின்றனர்.

Hot Topics

Related Articles