உலகம்

இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்களுக்கு கௌரவிப்பு

 

Women in Management, IFC மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் இணைந்து இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்களுக்கு கௌரவிப்பு

 

Women in Management (WIM) இனால் IFC மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆகியன இணைந்து சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் 2021 நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது இலங்கை மற்றும் மாலைதீவுகளில் தமது துறைகளில் சிறப்பாக செயலாற்றியிருந்த நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

11ஆவது ஆண்டாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது விருந்தோம்பல், வங்கி மற்றும் நிதியியல், சரக்குக் கையாளல் மற்றும் விநியோக சங்கிலிகள், தொழில்முயற்சியாண்மை, ஊடகம் மற்றும் சட்டம் போன்றவற்றுடன், தாம் தெரிவு செய்த தொழில்நிலைகளில் அல்லது தமது சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஊக்குவிப்பாக திகழ்ந்தமைக்காக கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கலின் போது, பணியிடங்களில் பெண்களின் வளர்ச்சி மற்றும் அவர்களுக்கு வலுவூட்டல் வழங்கியிருந்த இலங்கையின் நிறுவனங்களின் செயற்பாடுகளும் பாராட்டப்பட்டிருந்தன.

இந்த விருதுகள் வழங்கலின் போது உயர்ந்த விருதுகள் வைத்தியர். மஹேஷி ராமசாமி (ஆண்டின் சிறந்த உத்வேகமான பெண் நிபுணர்), பேராசிரியர். நதீரா கருணாவீர (ஆண்டின் சிறந்த உத்வேகமான பெண்), அருணி குணதிலக (Trail Blazer), ரந்துலா டி சில்வா (ஆண்டின் சிறந்த கேம் சேஞ்ஜர்) மற்றும் கலாநிதி. வஜிரா சித்ரசேன (நடுவர்களின் தெரிவு) போன்ற விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. விருதுகளின் வெற்றியாளர்கள் பற்றிய முழு விவரங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

Women in Management (WIM) இன் ஸ்தாபகர்/தலைமை அதிகாரி கலாநிதி. சுலோச்சனா செகேரா கருத்துத் தெரிவிக்கையில், “மீட்சி, ஆர்வ மனப்பாங்கு, கடும் உழைப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றின் கொண்டாட்டமாக 2021 ஆம் ஆண்டின் விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்திருந்தது. தொற்றுப் பரவல் ஆரம்பித்து மூன்றாவது ஆண்டில் நாம் காலடி பதித்துள்ள நிலையில், இன்னல் வேளைகளின் போதும் காணப்படும் வாய்ப்புகள் மற்றும் ஆற்றல்களைப் பற்றி இந்த ஆண்டின் வெற்றியாளர்கள் எமக்கு நினைவூட்டுவதாக அமைந்துள்ளனர். சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் இலங்கை மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த பெண்கள் கொண்டிருக்கும் ஆற்றல்களைப் பற்றியும் இவர்கள் எமக்கு நினைவூட்டியுள்ளனர். வெளிப்படையில் தமது நிலையை பெற்றுக் கொள்வதில் பெண்கள் பின்நின்றாலும், கடந்த தசாப்த காலப்பகுதியில் சிறந்த 50 பெண் நிபுணர்கள் விருதுகளினூடாக, அவர்களுக்கு தமது திறமைகள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புக் கிட்டியிருந்ததுடன், ஏனையவர்கள் மத்தியில் ஆர்வமனப்பாங்களை தோற்றுவிக்கக்கூடியவர்களாகவும் அமைந்திருந்தனர்.” என்றார்.

கடந்த காலங்களில் 470க்கும் அதிகமான வெற்றியாளர்களைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் நிலைபேறான மற்றும் உள்ளடக்கமான பொருளாதார வளர்ச்சியில் தலைவர்களாக, ஊழியர்களாக, தொழில் முயற்சியாளர்களாக மற்றும் பங்காளர்களாக ஆற்றும் பங்களிப்புகளை கௌரவித்து வெளிக் கொணரும் வகையில் சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் அமைந்துள்ளது.

இந்த நிகழ்வை இணைந்து முன்னெடுப்பதில் IFC ஏழாவது வருடத்தை பூர்த்தி செய்துள்ளதுடன், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான IFC இன் இடைக்கால முகாமையாளர் விக்டர் அந்தனிபிள்ளை கருத்துத் தெரிவிக்கையில், “பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்கள் சிறந்த வகையில் கட்டியெழுப்பப்படுவதற்கு நேர்த்தியான சூழலை கட்டியெழுப்ப வேண்டும். IFC-DFAT Women in Work நிகழ்ச்சியினூடாக ஆதரவளிக்கப்பட்டிருந்த இந்த ஆண்டின் சிறந்த 50 விருதுகள் வழங்கலினூடாக தொற்றுப் பரவல் மத்தியில் இலங்கையின் பெண்களின் மீட்சியான தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.” என்றார்.

 

இந்த நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில் சிறந்த 50 விருதுகள் வழங்கல் என்பதனூடாக, வியாபாரத்திலுள்ள பெண்கள் தமது சக்தியினூடாக தலைமைத்துவத்திலுள்ளவர்களையும் மற்றும் சமூகத்திலுள்ளவர்களினதும் கவனத்தை ஈர்த்து முன்மாதிரியாக திகழ்ந்திருந்தனர். கொவிட்-19 தொற்றுப் பரவல் காணப்படும் காலப்பகுதியில் 2022 விருதுகள் வழங்கலினூடாக இலங்கை பெண்களின் மீண்டெழுந்தன்மைக்கு கௌரவிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

 

சிறந்த 50 நிபுணத்துவ மற்றும் தொழில்நிலை பெண்கள் விருதுகள் 2021 க்கு டயலொக் அனுசரணை வழங்கியிருந்ததுடன், தங்க அனுசரணையாளர்களாக Salota International மற்றும் சிங்கர் இணைந்திருந்தன. வெள்ளி அனுசரணையாளர்களாக லங்கா ஐஓசி, யுனிலீவர், விஷன் கெயார் மற்றும் எயிட்கன் ஸ்பென்ஸ் ஆகியன இணைந்திருந்தன. நிகழ்வின் அனுசரணையாளர்களாக மலிபன் மற்றும் சம்பத் வங்கி ஆகியனவும் இணைந்திருந்தன. நிகழ்வின் அன்பளிப்புப் பங்காளராக New Vivya கைகோர்த்திருந்தது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் சட்டப்பிரிவின் தலைமை அதிகாரியும், செயலாளர் மற்றும் கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியும், 2021 ஆம் ஆண்டு விருதுகள் வழங்கலுக்கான நடுவர் குழுவின் தலைவருமான நதீஜா தம்பையா விருதுகளின் வெற்றியாளர்கள் பற்றி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஆண்டு விருதுகளுக்காக விண்ணப்பித்திருந்த பெண்களின் தரம் உண்மையில் உயர்வானதாக அமைந்திருந்தது. இந்தப் பெண்களின் தொழில்நிலைகளில் அவர்கள் அடைந்திருந்த சாதனைகளை மாத்திரம் கவனம் செலுத்தாமல், தொழிற்துறையில் அவர்களின் தாக்கம் மற்றும் தமது நிறுவனங்களில் ஏனைய பெண்களுக்காக எவ்வாறான பங்களிப்புகளை வழங்கியிருந்தனர் என்பது பற்றியும் கவனம் செலுத்துமாறு தூண்டப்பட்டிருந்தோம்.” என்றார்.

இந்த ஆண்டின் நடுவர் குழுவின் தலைவராக நதீஜா தம்பையா இயங்கியதுடன், குழுவில் Hayleys Agriculture Holdings Ltd முகாமைத்துவ பணிப்பாளர் ஜயந்தி தர்மசேன, Dreamron Group of Companies குழும முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கிஷு கோமஸ், Daily FT பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நிஸ்தார் கசிம், Clootrack இலங்கை/மாலைதீவுகள் மற்றும் பாகிஸ்தான் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஹாந்த அதுகோரல, Dialog Axiata PLC இன் குழு பிரதம வாடிக்கையாளர் அதிகாரி சான்ட்ரா டி சொய்ஸா, தந்திரோபாய சந்தைப்படுத்தல் நிபுணர் சந்தியா சல்காடோ, KL.LK பிரதம நிறைவேற்று அதிகாரி சந்தோஷ் மேனன், இலங்கைக்கான இடைக்கால அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அமன்டா ஜுவெல் மற்றும் IFC இன் Women in Work இல் நிகழ்ச்சி முகாமையாளர் சாரா ட்விக் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

 

BOX: ‘சிறந்த 50′ தொழில்நிலை மற்றும் நிபுணத்துவ பெண்கள் விருதுகள் 2021 வெற்றியாளர்கள்

 

Sri Lanka      
Category Name Designation Organization
மனித வளங்கள் (HR, HRD மற்றும் IR ஆகியவற்றைக் கொண்டது) தினலி பீரிஸ் குழும மனித வளங்கள் பணிப்பாளர் MAS ஹோல்டிங்ஸ், MAS கெப்பிட்டல் பிரைவட் லிமிடெட் பணிப்பாளர் சபை அங்கத்தவர்.
வங்கியியல் துறை (வங்கியியல் நிபுணர்கள்) கேசிலா ஜயவர்தன தலைமை அதிகாரி தேசிய சேமிப்பு வங்கி
நிதிச் சேவைகள் (நிதியியல் நிபுணர்கள், கணக்காய்வாளர்கள், காப்புறுதி சேவைகள், பங்குமுகவர்கள் மற்றும் லீசிங்) தினலி கட்டிபெஆராச்சி உப தலைவர் எயிட்கன் ஸ்பென்ஸ் கோர்பரேட் ஃபினான்ஸ் பிரைவட் லிமிடெட்
சந்தைப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள் (விற்பனைகள், வர்த்தக நாமங்கள், நுகர்வோர் பராமரிப்பு, பொது உறவுகள்) காவிந்திர ராஜபக்ச VP/சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி சொஃப்ட்லொஜிக் லைஃவ் இன்சூரன்ஸ் பிஎல்சி
சட்டம் அம்பிகா சற்குணநாதன் மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் சக ஊழியர் திறந்த சங்க மையம்
அரச மற்றும் பொதுத் துறை கிரேஸ் ஆசிர்வாதம் பெல்ஜியம், லக்சம்பேர்க் தூதுவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுக்குழுவின் தலைமை அதிகாரி வெளி விவகார அமைச்சு, இலங்கை
கூட்டாண்மை தொடர்பாடல் மனிந்திரி பண்டாரநாயக்க பிரதம வர்த்தக நாம சந்தைப்படுத்தல் அதிகாரி ஜனசக்தி குழுமம்
டிஜிட்டல் ஊடகம் தரிந்தி தலாஹிட்டி பிரதி ஆசிரியர் Pulse Derana
விநியோகத் தொடர் மற்றும் சரக்குக் கையாளல் தெபோரா திசாநாயக்க விற்பனைகள் பொது முகாமையாளர் Expolanka ஃபிரைட் பிரைவட் லிமிடெட்
விருந்தோம்பல் துறை (சுற்றுலா, உணவு மற்றும் பானங்கள், பிரயாணம், போக்குவரத்து மற்றும் நிகழ்வுகள், களியாட்டம் மற்றும் கவர்ந்திழுக்கும் பகுதிகள்) சந்திரா மதநாயக்க முகாமைத்துவ பணிப்பாளர் Fab ஃபுட்ஸ் பிரைவட் லிமிடெட்
கலை மற்றும் களிப்பூட்டல் தொழிற்துறை அனோலி பெரேரா கலைஞர் மற்றும் எழுத்தாளர்  
பாதுகாப்புப் படை மற்றும் சிவில் பாதுகாப்பு எஸ்எஸ்பி ஆர் ஏ. தர்ஷிகா குமாரி பணிப்பாளர் – சிறுவர் மற்றும் பெண்கள் சித்திரவதை தடுப்பு பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் சித்திரவதை தடுப்பு பிரிவு
விளையாட்டு தம்பு நெல்கா ஷிரோமலா அண்மையில் இடம்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் முதலாவது பெண் மத்தியஸ்தர் மற்றும் நடுவர்  
கல்வி (கல்வி நிலையங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்றன) பேராசிரியர். மங்கலா குணதிலக உடலியக்கவியல் பிரிவின் இணை பேராசிரியர்/பேராசிரியர், முகாமைத்துவ பணிப்பாளர்

 

கொழும்பு பல்கலைக்கழக, மருத்துவ பீடம், விலங்கு விஞ்ஞான ஆய்வுகூடங்களின் இலங்கையின் சம்மேளனம்

 

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பேராசிரியர். ஹிரன்யா பீரிஸ் University College London (UCL) இன் வான்பௌதீகவியல் பேராசிரியர், UCL Cosmoparticle முன்னெடுப்பின் பணிப்பாளர், மற்றும் Oskar Klein Centre இன் பணிப்பாளர் (http://www.okc.albanova.se/) for Cosmoparticle Physics in Stockholm.  
சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை வைத்தியர். பத்மா ஸ்ரீயானி குணரட்ன தலைவர் இலங்கை மருத்துவ சங்கம்
ஆண்டின் கூட்டாண்மை தலைமைத்துவம் வித்யா சிவராஜா முகாமைத்துவ பணிப்பாளர் ஃபொன்டெரா ஸ்ரீ லங்கா அன்ட் இந்தியா
ஆண்டின் சிறந்த பெண் பணிப்பாளர் சபை அங்கத்தவர் துஷாரா விஜேவர்தன நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர் கொமர்ஷல் பாங்க் ஒஃவ் சிலோன் பிஎல்சி
ஆண்டின் சிறந்த தொழில்நிலை முன்மாதிரியாளர் திலங்கா அபேவர்தன CMO Lead – தெற்காசிய புதிய சந்தைகள் மைக்குரோசொஃப்ட் ஸ்ரீ லங்கா
ஆண்டின் சிறந்த வியாபார முன்மாதிரியாளர் பசீலா தர்மரட்ன உரிமையாளர் CeeBees முன்பள்ளி மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம்
மாற்றத்துக்கான ஆண் சம்பியன் அஜய் அமலீன் இணை ஸ்தாபகர் /தவிசாளர் MAS ஹோல்டிங்ஸ்
ஆண்டின் சிறந்த சமூக மாற்றத்தை மேற்கொண்டவர் தேவதர்மினி செல்விகா சஹாதேவன் நிறைவேற்று பணிப்பாளர் யுனைட்டட் ஹியுமனிட்டி
ஆண்டின் சிறந்த உத்வேகமான பெண் நிபுணர் வைத்தியர். மஹேஷி ராமசாமி மருத்துவம் பிரித்தானிய-இலங்கை வைத்திய அதிகார மற்றும் விரிவுரையாளர். இவர் தற்போது ஒக்ஸ்பேர்ட் தடுப்பூசி குழுமத்தின் பிரதம ஆய்வாளர்களில் ஒருவராக பணியாற்றுகின்றார்
ஆண்டின் சிறந்த உத்வேகமான பெண் பேராசிரியர். நதீரா கருணாவீர ஒட்டுண்ணியியல் சிரேஷ்ட பேராசிரியர் கொழும்பு பல்கலைக்கழகம், மருத்துவ பீடம்
Trail Blazer அருணி குணதிலக தலைமை அதிகாரி HNB வங்கி
ஆண்டின் சிறந்த கேம் சேஞ்ஜர் ரந்துலா டி சில்வா ஸ்தாபக பிரதம நிறைவேற்று அதிகாரி GLX (Good Life X)
நடுவர்கள் விருது கலாநிதி. வஜிரா சித்ரசேன இலங்கையின் மூத்த பாரம்பரிய நாட்டிய கலைஞர் மற்றும் ஆசிரியர்  
அச்சு ஊடகம் சாந்தனி கிரிந்தி சிரேஷ்ட ஊடகவியலாளர் விஜய நியுஸ்பேப்பர்ஸ் லிமிடெட்
இலத்திரனியல் ஊடகம் சேத்தனா லியனகே சட்டன அரசியல் நிகழ்ச்சி தொகுப்பாளர் சிரச – மஹாராஜா குழுமம்
தொழில்நிலை சாதனையாளர்கள் ஷானி கல்யானிரட்ன கருணாரட்ன லெபனானின் இலங்கை தூதரகம் – தூதுவர்  லெபனான் தூதரகம்
  தேவிகா எல்லேபொல விற்பனை முகாமையாளர் – வணிக செயற்பாடுகள், இலங்கை எமிரேட்ஸ் விமானசேவை
  தர்ஷிகா ஜயசேகர செயற்திட்ட பணிப்பாளர் – களனி புதிய பால நிர்மாணத்தின் – செயற்திட்ட பணிப்பாளர்  
  சுமையா மக்கான் மார்கார் பிரதம சட்ட, ஒழுக்க மற்றும் அந்தரங்க அதிகாரி  அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லமிடெட்
உள்நாட்டு சர்வதேசம் (உள்நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டு வர்த்தகத்தை முன்னெடுப்பதில் சிறப்பாக செயலாற்றியவர்) சுஹன்யா ரஃபல் அருங்காட்சியக பணிப்பாளர் M+, ஹொங் கொங்.
பெண்களுக்கு வலுவூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நேர்த்தியான ஊடக பிரச்சாரத் திட்டம் NDB/சிரச ” ஸ்ரீ லங்கா வனிதாபிமான”  
சிறந்த பெண்கள் வலுவூட்டல்களை மேற்கொள்ளும் அரச சார்பற்ற நிறுவனம் / சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் அல்லது சம்மேளனம் SOS சிறுவர் கிராமங்கள் இலங்கை    
சிறந்த நிறுவனசார் கலாசார விருது (பாலின சமத்துவம், உள்ளடக்கமான மற்றும் நன்மதிப்புள்ள பணியிடம்) AIA இன்ஷுரன்ஸ் லங்கா லிமிடெட்    
பெண்கள் வலுவூட்டலில் நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட சிறந்த ESG செயற்திட்டம் Hirdaramani அப்பரல் WOW – The Wonders of Wellbeing நிகழ்ச்சி  
பண்புகள் மற்றும் திறன்களுடனான உத்வேகமான பெண் அசந்தி ருவன்மலி டி சில்வா கவிதை, பாடல், குறுங்கதை, புதுக்கதை மற்றும் அறிவிப்புத் துறையில் சிறப்பாக செயலாற்றும் கலைஞர் என்பதுடன் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறிய நபராவார் பார்வை குன்றியவர்
ஆண்டின் சிறந்த உத்வேகமான இளம் தொழில் முயற்சியாளர் ஹர்ஷி மனமேந்திர ஸ்தாபக பணிப்பாளர் இஷாரா வென்ச்சர்ஸ் பிரைவட் லிமிடெட்
சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் (பாரிய) ஷிஆ விக்ரமசிங்க குழும முகாமைத்துவ பணிப்பாளர் சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட்
சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் (சிறிய) கிரித்திகா துஷ்யந்த முகாமைத்துவ பணிப்பாளர்  டெக்னோ பிரைன் இன்டர்நஷனல் பிரைவட் லிமிடெட்
சிறந்த பெண் தொழில் முயற்சியாளர் (சிறிய) அதிஷா தஹநாயக்க ஸ்தாபக பணிப்பாளர் டபிள் XL பிரைவட் லிமிடெட்
வளர்ந்து வரும் பெண் தொழில் முயற்சியாளர் (5 விருதுகள்) வடக்கு, கிழக்கு, தெற்கு, மேல், மத்திய நயனதாரா விமலகுண கொடிதுவக்கு உரிமையாளர் தாரா வோட்டர்கேட் ஹோட்டல்
வளர்ந்து வரும் பெண் தொழில் முயற்சியாளர் (5 விருதுகள்) வடக்கு, கிழக்கு, தெற்கு, மேல், மத்திய புலானி ரணசிங்க ஸ்தாபகர்/பிரதம நிறைவேற்று அதிகாரி  லூன்ஸ் லெப் பிரைவட் லிமிடெட்
ஆண்டின் சிறந்த சமூக தொழில்முயற்சியாளர் ருச்சினி லியனகே முகாமைத்துவ பணிப்பாளினி  சுனிதியல்ஸ்
வளர்ந்து வரும் பெண் தொழில் முயற்சியாளர் (5 விருதுகள்) வடக்கு, கிழக்கு, தெற்கு, மேல், மத்திய சாந்தினி அஹங்கம ஸ்தாபகர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கொகனட் மிரகிள் பிரைவட் லிமிடெட்
வளர்ந்து வரும் பெண் தொழில் முயற்சியாளர் (5 விருதுகள்) வடக்கு, கிழக்கு, தெற்கு, மேல், மத்திய டி எம் பொடிமெனிகே உரிமையாளர்  பாக்யா பான் புரொடக்ட்ஷன் – பொலன்னநறுவை
வளர்ந்து வரும் பெண் தொழில் முயற்சியாளர் (5 விருதுகள்) வடக்கு, கிழக்கு, தெற்கு, மேல், மத்திய ஜி. சிவஜோதி உரிமையாளர்  லக்ஷ்மி புரொடக்ட் – கல்முனை
மாலைதீவுகள்      
ஆண்டின் சிறந்த நிபுணத்துவ முன்மாதிரியானவர் உசா ஆயிஷா சுஜுன் முஹம்மட் உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
ஆண்டின் சிறந்த தொழில்நிலை சாதனையாளர் அய்ஷத் ஜெனிபர் ஐலன்ட் ஏவியேஷன் சேர்விசஸ் லிமிடெட் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்
நோக்கத்தைக் கொண்ட பெண் வைத்தியர். பாத்திமா நஸ்லா ரஃபீக் சுகாதார பாதுகாப்பு முகவரமைப்பு மருத்துவ அதிகாரி (தலைமை அதிகாரி, தொற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவு)
ஆண்டின் சிறந்த உத்வேகமான பெண் மைமூனா அபூபகுரு சுகாதார பாதுகாப்பு முகவரமைப்பு பணிப்பாளர் நாயகம்
காலநிலை செயற்பாடு விருது அயிஷத் ஹுதா அஹமட் சுயாதீன சூழல் ஆலோசகர்  
ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர் அபிதா இஸ்மைல் அலி ஆடை வடிவமைப்பாளர்  

 

 

WIM இனைப் பற்றி

பெண்களின் வெற்றிக்காக அர்ப்பணிக்கப்பட்ட Women in Management (WIM) இலங்கையின் பெண் தொழில் வல்லுனர்களையும் தொழில் முனைவோரையும் ஒரு தனித்துவமான இணைய தளத்தின் மூலம் ஒன்றிணைத்து, அவர்களின் திறமைகளை உலகளாவிய வெற்றிக்கு கொண்டு செல்கிறது. மேலதிக தகவல்களை பின்வரும் லிங்க்களில் பார்வையிடவும்:

www.womeninmanagementawards.org/

www.womeninmanagement.org/

www.facebook.com/SLWIM/

www.twitter.com/WomeninManageme

www.linkedin.com/in/women-in-management-sri-lanka

 

IFC இனைப் பற்றி

உலக வங்கியின் சகோதர அமைப்பும் உலக வங்கிக் குழுவின் உறுப்பினருமான IFC வளர்ந்து வரும் சந்தைகளில் தனியார் துறையில் கவனம் செலுத்திய  மிகப்பெரிய உலகளாவிய வளர்ச்சி நிறுவனம் ஆகும். உலகெங்கிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் நாங்கள் பணியாற்றுகிறோம், எங்கள் மூலதனம், நிபுணத்துவம் மற்றும் செல்வாக்கினைப் பயன்படுத்தி சந்தைகள் மற்றும் வாய்ப்புக்களை உருவாக்க மிகவும் தேவைப்படும். 2021ஆம் நிதியாண்டில் வளரும் நாடுகளுக்கு 31.5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நீண்ட கால நிதியுதவியினை நாங்கள் வழங்கினோம், தீவிர வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் பகிர்வு செழிப்பினை அதிகரிப்பதற்கும், கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பொருளாதார சுபீட்சத்திற்கும் தனியார் துறையின் சக்தியை மேம்படுத்துகிறோம். மேலும் தகவல்களுக்கு, www.ifc.org. ஐப் பார்வையிடவும்.

 

Stay Connected

www.facebook.com/IFCwbg

www.twitter.com/IFC_org

www.youtube.com/IFCvideocasts

www.instagram.com\ifc_org

www.ifc.org/southasia

www.facebook.com/IFCsouthasia

www.twitter.com/IFC_SouthAsia

 

 

Hot Topics

Related Articles