உலகம்

மலேசியவில் கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழா!

மலேசிய இந்துக்கள் செவ்வாயன்று கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடினர், குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

பக்தர்கள் தங்கள் கன்னங்களில் வேல் குத்துவது மற்றும் காவடிச் சுமப்பது போன்ற சில நேர்த்திகள், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத் திருவிழா கடந்த ஆண்டு தொற்றுநோய் காரணமாக இரத்து செய்யப்பட்டது.

தைப்பூசத் திருவிழா இந்தியாவில் மட்டுமல்ல, அதிகமான இந்து சமூகங்களைக் கொண்ட மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.

 

சிங்கப்பூரில், செவ்வாய்கிழமை தைப்பூசக் கொண்டாட்டங்களுக்காக 14,000 பேர் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மக்கள் ஐந்து குழுக்களாக மட்டுமே வழிபட முடியும் என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மலேசிய சுகாதார நெறிமுறைகள் இந்த ஆண்டு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை 6,000 ஆக மட்டுப்படுத்தியது, வழக்கமாக வருகை தரும் பல்லாயிரக்கணக்கானவர்களுடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைவு.

அத்தோடு மக்கள் காவடிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதற்குப் பிறகு தைப்பூசக் கொண்டாட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பும் என நம்புகிறேன் என்றார் கிருஷ்ணசாமி.

Hot Topics

Related Articles