‘ 2047ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியா தனது 100-வது ஆண்டில் கற்பனைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியை எட்டும் என மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
‘இந்தியா-2047-ம் ஆண்டு தொலைநோக்கு’க்கான முதலாவது கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
உலகின் தொழில்நுட்ப, பொருளாதார வல்லரசாக மாறும். கடந்த ஆண்டு ஒகஸ்ட் 15ஆம் திகதி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதைப் போல இந்தியாவினால் ‘எதுவும் முடியும்’ என்று சொல்லும் தலைமுறையால் எதையும் சாதிக்க முடியும்.
நிர்வாகத்துக்கான தொலைநோக்கு செயல்திட்டத்தை நாம் உருவாக்கும் அதேநேரம், மக்களையும் அரசையும் நெருக்கமாக கொண்டுவர, அதற்கேற்ப டிஜிட்டல் நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும். டிஜிட்டல் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்திவருகிறது.