உலகம்

பொங்கல் தினத்தில் சிவகார்த்திகேயன் கொடுத்த சப்ரய்ஸ்!

சிவகார்த்திகேயன் மனைவியும் அவருடைய ஒன்பது வயது மகள் ஆராதனா மற்றும் ஒரு வயது ஆண் குழந்தை குகன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

இந்த புகைப்படத்துடன் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பொங்கல் தின வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

 

சிவகார்த்திகேயனின் குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா மளமளவென வளர்ந்து விட்டார்களே!’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் அடிக்கின்றனர்.

சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது சினிமா பயணத்தை துவங்கிய, சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி கதாநாயகனாக விளங்குகிறார்.

இவர் நடித்த டாக்டர் திரைப்படம் கொரோனா காலக்கட்டத்திலும் கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்டு 100 கோடி வசூலை குவித்தது.

Hot Topics

Related Articles