உலகம்

டோங்கா எரிமலை குமுறல் – 10,5000 மக்களின் நிலை என்ன?

(photo : twitter/@EarthQuakesTime)
 

பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலின் அடியில் உள்ள எரிமலை வெடிக்க துவங்கியதையடுத்து அங்கு சுனாமி தாக்கியது.

இதனால் தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகளை துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்கு சிறிய தீவுகளில் வாழும் 10,5000 மக்களின் நிலைமை தொடர்பில் கவலைகள் எழுந்துள்ளன.

வெள்ளிக்கிழமை இரவு ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாபாய் எரிமலை வெடித்து, சாம்பல், நீராவி மற்றும் வாயுவை 17 கிமீ (10.5 மைல்) வரை காற்றில் பரவியது.

அலைகள் டோங்கன் கடற்கரையில் மோதியதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் கடல்நீர் புகுந்ததை சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகள் காட்டின.

“டோங்காவிற்கு அருகாமையில் எரிமலை வெடிப்பின் படங்கள் மிகவும் கவலைக்குரியவை” என்று டோங்காவிலிருந்து 1,481 மைல் தொலைவில் அமைந்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து வெளியுறவு அமைச்சகம் இதுவரை காயங்கள் அல்லது இறப்புகள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை, ஆனால் தகவல் தொடர்பு குறைவாகவே உள்ளது.
நியூசிலாந்தில் உள்ள டோங்கன் தேவாலயங்கள் தீவு மக்களுக்காக பிரார்த்தனைகளை ஏற்பாடு செய்தன.

“இந்த சோகமான தருணத்தில் நம் நாட்டிற்கு கடவுள் உதவ வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்…” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளது.

Hunga-Tonga-Hunga-Ha’apai எரிமலை கடந்த சில தசாப்தங்களாக தொடர்ந்து குமுறி வருகிறது, ஆனால் சனிக்கிழமை வெடிப்பு மிகவும் சத்தமாக இருந்தது, தொலைதூர பிஜி மற்றும் நியூசிலாந்தின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் அதைக் கேட்டதாகக் கூறினர்.

இதனை செயற்கைக்கோள் படங்கள் இந்த காட்சியை படம்பிடித்துள்ளன. எரிமலை வெடிப்பு புகை மண்டலங்களை கடல் மட்டத்திலிருந்து சுமார் 12 மைல் உயரத்திற்கு அனுப்பியது.

 

Hot Topics

Related Articles