உலகம்

சர்வதேசத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ள இலங்கை யானைகள்!

இலங்கையில் உள்ள குப்பை மேடுகளில் இரண்டு யானைகள் இறந்துள்ளமை சர்வதேச அரங்கில் யானைகளின் நிலையை வெளியில் கொண்டுவந்துள்ளது.

குப்பை மேடுகளில் யானைகள் உணவு தேடும் போது தற்செயலாக பிளாஸ்டிக்கை உண்கின்றன, இந்த அவலத்தை காண்பிக்கும் வகையான படங்கள் உலகெங்கிலும் உள்ள விலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

கடந்த 8 ஆண்டுகளில் கொழும்பில் இருந்து கிழக்கே 130 மைல் தொலைவில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ள பள்ளக்காடு கிராமத்தில் உள்ள குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகளை உட்கொண்ட சுமார் 20 யானைகள் உயிரிழந்துள்ளன.

இறந்த விலங்குகளை பரிசோதித்ததில், குப்பை மேட்டில் உள்ள மக்காத பிளாஸ்டிக்கை அதிக அளவில் விழுங்கியிருப்பது தெரியவந்ததாக வனவிலங்கு கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்பகுமார டெய்லி மெயிலுக்கு தெரிவித்தார்.

‘பொலித்தீன், உணவுப் பொதிகள், பிளாஸ்டிக், மற்ற ஜீரணிக்க முடியாத பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை மட்டுமே பிரேத பரிசோதனையில் பார்க்க முடிந்தது. யானைகள் சாப்பிட்டு ஜீரணிக்கும் சாதாரண உணவு தெளிவாக காணப்பட வில்லை என அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் யானைகள் இயற்கையான வாழ்விடம் அழிக்கப்பட்டமை உள்ளிட்ட பல போராட்டங்களை எதிர்கொள்கின்றன.

அவை அழியும் அபாயத்தில் உள்ளதாக ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில் நாட்டில் யானைகள் கணக்கெடுப்பிடிக்கப்பட்ட போது 14,000 ஆக இருந்த அவற்றின் எண்ணிக்கை 2011 இல் 6,000 ஆகக் குறைந்துள்ளது.

 

 

Hot Topics

Related Articles