உலகம்

INSEE சீமெந்து நிறுவனம் இலங்கையின் கட்டுமானத்துறையில் புத்தாக்கத்தையும், வளர்ச்சியையும் வழிநடாத்திச் செல்கிறது

உத்வேகத்தையும், தொடர்ச்சியான வணிகச் செயற்பாடுகளையும் மீளப்பெற கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களுக்கு அதிகரித்த அளவில் பெறுமதி சேர்க்கும் சேவைகளை தொடர்ச்சியாக வழங்குகிறது

 

INSEE Cement – இலங்கையின் மிகப்பெரிய மற்றும் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனமாகத் திகழ்ந்து வருவதுடன், உள்ளூர் கட்டுமானத் துறையின் செயற்பாடுகள் சீராக மீட்சி பெற உதவும் வகையில் பெறுமதி சேர்க்கும் சேவைகள் வடிவில், செயல்திறன் அடிப்படையிலான வடிவமைப்பு தீர்வுகள், தொழில்நுட்ப திறன்கள் மற்றும் தொழில் நிபுணத்துவம் ஆகியவற்றை ஒப்பந்தகாரர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கி, தொழில்துறையுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத்திட்டங்களை விரைவுபடுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அவற்றை பூர்த்தி செய்ய உதவுகிறது.

 

“எங்கள் சீமெந்து தயாரிப்புக்கள் மற்றும் கொங்கிரீட் தீர்வுகள் தயாரிப்பு வரிசை மீது முதலீடு செய்கின்ற இத்துறையுடன் தொடர்புபட்ட தரப்பினருக்கு பெறுமதி சேர்ப்பிக்கும் மிகவும் புத்தாக்கமான மற்றும் நிலைபேண்தகு செயல்திறன் கொண்ட கட்டுமான தீர்வுகளை வெளிக்கொண்டு வருவதில் கவனம் செலுத்த எங்கள் தொலைநோக்கு எங்களுக்கு இடமளித்துள்ளது,” என்று INSEE Cement நிறுவனத்தின் தயாரிப்புக்கள் மற்றும் தீர்வுகள் வரிசையின் தலைமை அதிகாரியான கலாநிதி மௌஸா பால்பாகி அவர்கள் குறிப்பிட்டார். “தற்போதைய நிலைமையிலிருந்து மீண்டு வரத் துடிக்கின்ற ஒரு தொழிற்துறை என்ற ரீதியில், மீளுகின்ற செயல்முறையை விரைவுபடுத்தக்கூடிய தற்போதைய திறன்கள் மற்றும் ஆற்றல்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தொற்றுநோய் நிலைமையின் போது எங்கள் தொழில்துறை இழந்த உத்வேகத்தையும், நம்பிக்கையையும் மீண்டும் பெற எங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி ஒத்துழைக்க தொழில்துறையில் எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் அழைப்பதில் INSEE Cement மகிழ்ச்சியடைகிறது,” என்று தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

 

பகிரங்க  ஒத்துழைப்பு மற்றும் அறிவு பகிர்வின் வலுவான ஆலோசனை வழிகாட்டலுடன், INSEE Cement நிறுவனம் INSEE i2i Innovation to Industry Collaboration Space என்ற கூட்டுப்பணியகத்தை வெளிப்படைத்தன்மை, வேகம் மற்றும் தொடர்பு வலையமைப்பு ஆகியவற்றால் முன்னெடுத்துச் செல்லப்படும் ஒத்துழைப்புடன் தொழில்துறையில் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருடனும் ஈடுபாடுகளை பேணுவதற்கென பிரத்தியேகமான அதிநவீன மையமாக நிறுவியுள்ளது. இந்த மையம் பகிரப்பட்ட பெறுமதியைத் தோற்றுவிப்பதிலும், ஒத்துழைப்புடன் இலங்கையில் புத்தாக்கமான மற்றும் திறனுடனான நிலைபேண்தகு கட்டுமான தீர்வுகளை வடிவமைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

பேலியகொடையில் அமைந்துள்ள i2i கூட்டுப் பணியகம் என்பது பொறியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தாக்குனர்கள், கட்டிடக் கலைஞர்கள், கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்தகாரர்கள் மற்றும் கட்டுமானத் தீர்வுகளின் வளர்ச்சி மாற்றத்திற்காக ஒத்துழைக்க விரும்பும் போட்டி நிறுவனங்களுக்கு அறிவு பரிமாற்ற மையம் மற்றும் சிந்தனைப் பிறப்பிடம் ஆகும். 50 க்கும் மேற்பட்ட சோதனை மற்றும் அளவீட்டு கருவிகள், இலங்கை கட்டுமானத் துறைக்கு புதிய 15 சோதனைகள் உட்பட, INSEE i2i Collaboration Space கூட்டுப்பணியகம் கட்டுமான செயற்திட்டங்களுக்கான கடுமையான பொருளாதார, கட்டமைப்பு மற்றும் செயல்திறன் அளவுகோல்களை பூர்த்தி செய்வதற்கு ஒப்பந்தகாரர்கள், நிர்மாணிப்பாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு இடமளிக்கிறது.

கொங்கிரீட் கலவைகளின் உச்ச பயன்பாட்டைக் கருதுகையில், INSEE i2i ஆனது உருவகப்படுத்துதல்கள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், சோதனை உபகரணங்கள் மற்றும் கொங்கிரீட் கலவை வடிவமைப்புகளுக்கான பல அளவுருக்களை மதிப்பீடு செய்வதற்கான நிபுணத்துவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி முழுமையான தீர்வுகளை வழங்குகிறது. இந்த கூட்டுப்பணியகம் திட்டமிடல் நிலைகளின் போது செயற்திட்டத்திற்கு முன்னரான கலவை வடிவமைப்பு மதிப்பீடுகளை வழங்குகிறது. தள கட்டுமான பொறியாளர்கள், கட்டிடக் கலைஞர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோரின் ஆலோசனையுடன் கலவை வடிவமைப்பை மேம்படுத்தி, அவர்களின் கட்டுமானத் தேவைகளை பூர்த்தி செய்யும். INSEE இன் i2i நிபுணர் ஆலோசகர்களின் அணி, மாதிரி வடிவமைப்பு, சோதனை மற்றும் முடிவு மதிப்பீடுகளின் அடிப்படையில், செயல்திறன் மற்றும் செலவு-உச்சப்பயனாக்கம் ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையைப் பேணி, கட்டுமானங்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குகிறது.

 

INSEE இன் i2i வர்த்தகச்சின்னத்துடனான INSEE ConTemp™ வெப்ப மாதிரி வடிவமைப்பு உருவகப்படுத்தல் மென்பொருள், கலவைக்கு முன் மொத்த அளவில் சீமெந்து தேவைகளைக் கொண்ட பாரிய அளவிலான கட்டுமானச் செயற்திட்டங்களின் வெப்ப மாதிரி உருவாக்கங்களை தோற்றுவிக்கிறது, பட்ஜெட் மற்றும் கட்டுமான நேரங்களை வெகுவாகக் குறைக்கும் முக்கியமான தீர்மானங்களை எடுக்க உதவுவதன் மூலம் ஒப்பந்தகாரர்களுக்கு பயனளிக்கிறது. ஒப்பந்தகாரர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் குறிப்பிட்ட செயற்திட்டத்தின் கட்டுமான சவால்களை எதிர்கொள்ள பிரத்தியேகமான செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அடிப்படை தொழில்நுட்ப விளக்கக்காட்சிகள் முதல் பிரத்தியேகமான கொங்கிரீட் கலவை வடிவமைப்பு பயிற்சிகள் வரை பலவும் இதில் அடங்கியுள்ளன.

 

தொடர்புபட்ட அனைத்து தரப்பினரும் INSEE இன் சுற்றுச்சூழல் முதலீடுகள் மற்றும் உமிழ்வு மட்டங்களின் அளவைக் குறைக்கவும் மற்றும் கூட்டு முயற்சியுடன் தொழில்துறை காபன் அடிச்சுவட்டைக் குறைக்கவும் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் மூலமாக பயனடைய உள்ளனர். ஏக்கர் கணக்கில் அகழ்வுச் சுரங்க சீரமைப்பு மற்றும் காடு வளர்ப்பில் இருந்து, தற்போது சந்தையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சீமெந்து தயாரிப்புகளில் ஒன்றான, இலங்கையின் முதன்முதல் அதிசிறந்த கூட்டு கலவைச் சீமெந்தைத் தயாரிப்பது வரை, INSEE Cement இன் சுற்றுச்சூழலுக்கு தீங்கிளைக்காத முயற்சிகள் ஒப்பந்தகாரர்கள், நிர்மாணிப்பாளர்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதால், குறைந்த காபன் அடிச்சுவடு கொண்ட உயர் திறன் கொண்ட நிலைபேண்தகு கட்டமைப்புகளை நிர்மாணிக்க வழிகோலுகின்றது.

 

கொவிட்-19 தொற்றுநோயின் பின்விளைவுகளிலிருந்து விரைவாக மீட்சிகாண, INSEE Cement தளபாட போக்குவரத்துக்கள், விநியோக மார்க்கங்கள் மற்றும் வழங்கல்; சங்கிலிகளின் மாற்றங்களுக்கேற்ப விரைவாக அவற்றைத் தழுவி, ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுக்கான தொலைநோக்குடன் சாத்தியமான அளவில் அதிக சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலைபேண்தகு தீர்வுகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. எங்கள் சீமெந்து மற்றும் கொங்கிரீட் தயாரிப்புகளின் தர நிலைத்தன்மையானது தொற்றுநோய் நிலைமைக்கு முன்னரும், பின்னரும் முக்கிய கவனம் செலுத்தப்படும் பகுதியாக உள்ளதுடன், முழு உள்ளூர் கட்டுமானத் தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பின் தரத்தை உயர்த்துவதும் இந்த நிறுவனத்தின் ஆணையாக உள்ளது. உள்ளூர் சீமெந்து சந்தையைப் பற்றிய நிறுவனத்தின் முழுமையான புரிதலுக்கும், தொழில்துறை சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பெறுமதி சேர்ப்பிக்கும் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வளர்ப்பதற்கும் சான்றாக, INSEE நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் மிக உயர்வான மாதாந்த விற்பனை அளவுகளை பதிவு செய்துள்ளது.

 

 

 

Hot Topics

Related Articles