உலகம்

‘துரு மிதுரு’ அறிமுகத்துடன் Allianz Lanka ஒரு நிலைதன்மையை முன்னோக்கி நகர்கிறது

நிலைதன்மை கொண்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த செயற்பாடுகளை நோக்கிய Allianz குழுமத்தின் உலகளாவிய முயற்சிகளுடன் இணைந்து, Allianz Lanka நிறுவனமும் நமது சுற்றுச்சூழலுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு அவர்களின் கார்பன் தடத்தை குறைப்பதில் ஈடுபட்டுள்ளது.  Allianz Lanka நீறுவனத்தினால் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘துரு மிதுரு’ திட்டமானது, நிறுவன ரீதியாக மேற்கொள்ளப்படும் மரநடுகைத் திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு ஊழியரினால் வெளியேற்றப்படும் பச்சைவீட்டு வாயுவினை (Greenhouse Gas) 30% இனால் குறைக்கும் பரந்த அர்ப்பணிப்பை ஆதரிக்கும் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் முயற்சியாகும்.

 

மரம் நடுதல் என்பது தனிப்பட்ட மட்டத்தில் எளிதாக செயல்படுத்தக்கூடிய ஒரு முயற்சியாக இருப்பதனால், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான எளிய, பயனுள்ள வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, அதே நேரத்தில் அதிக மரங்கள் நடப்பட்டால், அதிக காபனீரொடசைட் வெளியேற்றமும் உறிஞ்சப்படுகிறது. ‘துரு மிதுரு’ திட்டத்தின் மூலம், Allianz Lanka நிறுவனத்தின் ஒவ்வொரு பணியாளருக்கும் உள்நாட்டு பழச் செடிகள் வழங்கப்பட்டது. இச்செடிகள் ஒவ்வொரு புவியியல் சூழமைவின் மணல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப அதன் இணக்கத்தன்மையை உறுதிப்படுத்த்தும் விதமாக மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும், பிளாஸ்டிக் பயன்பாடு முற்றாக இல்லாதிருப்பதை உறுதி செய்யவும், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் உணவுச் சங்கிலி உட்பட சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் மேலும் நடவடிக்கைகள் எடுக்கும் முகமாகவும் 2,200 க்கும் மேற்பட்ட செடிகள் மீள்சுழற்சி செய்யப்படக்கூடிய பைகளில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

கடந்த ஆண்டின் படிப்பினைகளைப் பற்றி சிந்திக்கவும், நிலையான, வளமான மற்றும் நம்பிக்கையான 2022க்கான நோக்கத்தை அமைக்கவும் 2021 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தைப் பயன்படுத்துவதன் மூலம்  Allianz Lanka நிறுவனம் அதன் ஊழியர்களையும் அவர்களது குடும்பங்களையும் சமூகத்தாரையும் ‘துரு மிதுரு’ வில் பங்கேற்க ஊக்குவித்தது. நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களது பிள்ளைகளின் சாதனையுணர்வு மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிக்கவும், அவர்களின் சொந்தத் திறனில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் அவர்கள் இத்திட்டத்தில் பங்குபெறுவதற்கு ஊக்குவிக்கப்பட்டனர்.

 

துரு மிதுரு முயற்சியை மேலும் செழுமைப்படுத்தும் நோக்கில், Allianz Lanka நிறுவனத்தின் ஊழியர்கள் உள்நாட்டு நிபுணர் ஒருவருடன் ஒரு இணையவழி கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலின்போது, நமது சுற்றுச்சூழலை கவனித்துக்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட தாவரச்செடிகளை எவ்வாறு சிறந்த முறையில் பராமரிப்பது போன்ற பல முக்கிய விடயங்கள் பகிரப்பட்டன.

 

இந்த முயற்சி குறித்து Allianz Lanka வின் பிரதம நிறைவேற்று அதிகாரி கானி சுப்ரமணியம் பேசுகையில், “Allianz இல், நமது வர்த்தக முறையில் நிலைத்தன்மை ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. ‘துரு மிதுரு’ என்பது நமது இதயங்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு முயற்சியாகும். மரம் நடும் எளிய செயலானது சமூகங்களை ஒன்றிணைத்து பலஎதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கையை வளமாக்குகிறது. நம்மை செழிப்பில் வாழவைக்கும் சுற்றுச்சூழலுக்கு நாம் திரும்பக் கொடுப்போம் என்ற பொதுவான இலக்கை நோக்கிச் செயல்படுவதை உறுதிசெய்யும் முகமாக அனைத்து இலங்கையர்களையும் தங்களால் இயன்ற வழிகளில் இந்தத் திட்டத்தில் பங்கேற்குமாறு நாம் அன்புடன் அழைக்கிறோம்.”

Image caption: துரு மிதுரு திட்டத்தில் பங்கேற்கும் அலையன்ஸ் லங்காவின் (Allianz Lanka) ஊழியர்கள்

Hot Topics

Related Articles