உலகம்

ஆள் கடத்தல்காரர்களுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க குவாத்தமாலா ஜனாதிபதி கோரிக்கை!

(Photo : twitter /@DrGiammattei)

ஆள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனையை கடுமையாக்கவும், மோசமான குற்றவாளிகளுக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் குவாத்தமாலா ஜனாதிபதி அலெஜான்ட்ரோ கியாமட்டே வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

பல ஆண்டுகளாக குவாத்தமாலா வறிய மத்திய அமெரிக்க குடியேற்ற வாசிகளுக்கு ஒரு முக்கிய நாடாக இருந்து வருகிறது.

குவாத்தமாலா மக்கள் உட்பட வறுமை நாடுகளை சேர்ந்த மக்கள் சிறந்த வாழ்க்கையைத் தேடி அமெரிக்காவிற்கு அபத்தான பயணங்களை மேற்கொள்கின்றனர்.

இதனால் ஏற்படும் விபத்துகளில் அதிகமான மக்கள் உயிரிழப்பதை தடுக்கும் முயற்சியாக குவாத்தமாலா ஜனாதிபதி இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

தற்போது குவாத்தமாலா சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள “கொயோட்ஸ்” எனப்படும் கடத்தல்காரர்களுக்கான தண்டனையை 2 முதல் 5 ஆண்டுகளில் இருந்து 10 முதல் 30 ஆண்டுகள் வரை உயர்த்த ஜியாமட்டே முன்மொழிந்தார்.

அத்தோடு அமெரிக்காவும் ஆட்கடத்தல்காரர்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

Hot Topics

Related Articles