உலகம்

இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை வழங்கும் இந்தியா

இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை வழங்குவதை உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த இந்தியா 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.

அந்த தொகையுடன் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய உயர்ஸ்தானிகர் மத்திய வங்கியின் ஆளுநரை சந்தித்து இந்தியாவின் ஆதரவை இலங்கைக்கு தெரிவித்ததாக உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

 

 

Hot Topics

Related Articles