உலகம்

2022 இல் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் தொடர்பில் அறிவிப்பு!

2021 கல்வி ஆண்டுக்கான பரீட்சைகள் 2022 இல் நடைபெறும் தினங்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்,

இந்த வருடத்தில் நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகிய பரீட்சைகள் நடைபெறும் தினங்களில் மாற்றமெதும் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2021 ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவிருந்தது. இருப்பினும், இவை இரண்டு முறை பின்போடப்பட்டன.

முன்பு திட்டமிட்ட வகையில் புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22 ஆம் திகதியும், உயர்தர பரீட்சை இந்த வருடம் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

Hot Topics

Related Articles