தேவாலயத்தின் முன் நிர்வாணமாக போஸ் கொடுத்த 24 வயதான ரஷ்ய நட்சத்திரம் போலினா முருகினா, அபராதம் அல்லது சிறையை தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.
உடலின் பெரும்பாலான பகுதிகளில் பச்சை குத்தியுள்ள இவர் மாஸ்கோவில் உள்ள ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மேரியின் தேவாலயத்திற்கு வெளியே போஸ் கொடுத்ததாக பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுப் பல மாதங்கள் கடந்துள்ள போதிலும் சமீபத்தில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து புனிதமான இடங்களுக்கு அருகில் சர்ச்சைக்குரிய படங்களை வெளிப்படுத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘விசுவாசிகளின் மத உணர்வுகளை அவமதித்ததாக’ குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 4000 டொலர்கள் அபராதம் அல்லது ஒரு வருடம் சிறைத்தண்டனையை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது,
குறித்த நடிகை போலிஸாரின் நடவடிக்கை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் சர்ச்சைக்குரிய படம் வெளியிடப்பட்ட தனது இன்ஸ்டாகிராம் கணக்கை மூடியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஆண்டு சிவப்பு சதுக்கத்தில் உள்ள செயின்ட் பசில்ஸ் கதீட்ரல் அருகே தவறாக நடந்து கொண்ட இருவருக்கு மாஸ்கோ நீதிமன்றம் 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தது.