உலகம்

தங்கப் பதக்கம் பெற்ற எலி மகவா விடைபெற்றது!

கம்போடியாவில் கண்ணிவெடி அகற்றும் பணியில் வீரத்திற்கான தங்கப் பதக்கம் பெற்ற எலி மகவா, எட்டு வயதில் உயிரிழந்தது.

பெல்ஜியத்தின் APOPO தொண்டு நிறுவனத்தால் பயிற்றுவிக்கப்பட்ட மகவா, தனது ஐந்தாண்டு பணியில் கம்போடியாவில் 71 கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத 28 வெடிமருந்துகளைக் கண்டுபிடித்துள்ளது.

இதற்காக மகவா, சில மாதங்களுக்கு முன்பு ஜார்ஜ் கிராஸுக்கு நிகரான ஒரு சிறிய பிடி.எஸ்.ஏ தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

மகவா, கடந்த ஜூன் தனது பணிகளில் இருந்து முதுமை காரணமாக ஓய்வு பெறுவதாக அதனை கையாள்பவர்கள் அறிவித்திருந்தனர்.

APOPO தொண்டு நிறுவனம் ஒரு அறிக்கையில், ‘APOPO இல் உள்ள நாங்கள் அனைவரும் மகவாவின் இழப்பை உணர்கிறோம்.

மேலும் அவர் செய்த நம்பமுடியாத பணிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். என தெரிவித்துள்ளது.

Hot Topics

Related Articles