உலகம்

செல்ல பிராணியின் பிறந்தநாளை 28 இலட்சம் ரூபா செலவில் கொண்டாடிய சீன பெண்!

சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் தனது செல்ல பிராணியான நாயின் பிறந்தநாளுக்கு (14000 அமெரிக்க டொலர்கள்) 28இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவழித்து பார்ப்போரை வியப்படைய வைத்திருக்கிறார்.

சீனாவின் சாங்க்‌ஷா பகுதியிலுள்ள சியான்ஜியாங் ஆற்றுப்பகுதியில் ஒரு பெண் தனது செல்ல நாயின் 10-வது பிறந்தநாளை 28இலட்சம் ரூபா செலவுசெய்து கொண்டாடி இருக்கிறார்.

520 ட்ரோன்களை வாடகைக்கு எடுத்து, அவற்றை ‘’ஹேப்பி 10வது பர்த்டே டௌ-டௌ’’ என்ற எழுத்துகள் மற்றும் மற்றும் நாயின் உருவப்படம் ஆகிய வடிவங்களில் ஆகாயத்தில் பறக்கவிட்டு கொண்டாடி இருக்கிறார்.

மாண்டரின் மொழியில் 520 என்ற எண்ணுக்கு ஐ லவ் யூ என்ற அர்த்தமும் இருப்பதால் அந்த பெண் 520 ட்ரோன்களை பறக்கவிட்டுள்ளார்.

ஆனால் சீனாவின் ஆற்றங்கரையில் ட்ரோன்களை பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியில் இவர் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்காமல் தடுத்துவிட்டனர் போலீசார்.

Hot Topics

Related Articles