உலகம்

Fresh Dry Technology உடன் தொழில்துறையில் ஒரு புதிய மைல்கல்லைக் கடக்கும் N-Joy

 

 

இலங்கையின் முன்னணி தேங்காய் எண்ணெய் வர்த்தகநாமமான N-Joy, நவீன உற்பத்தி செயல்முறையான Fresh Dry Technology (FDT)ஐ பின்பற்றி தேங்காய் எண்ணெய் தொழிற்துறையில் ஒரு புதிய மைல்கல்லைப் பதிவுசெய்து, உலகளாவிய தரத்தை உறுதிசெய்துள்ளது.

உணவுப் பாதுகாப்புத் தரங்களின் உலகளாவிய பயன்பாடுகளைக் நெருக்கமாக கடைப்பிடித்து, உற்பத்தி செயல்முறையைத் தானியங்குபடுத்துவதற்கும், பொருட்களுடன் மனித தொடர்பைக் குறைப்பதற்கும் உள்ள ஒரே உள்ளூர் நிறுவனம் இதுவாகும். RBD (சுத்திகரிக்கப்பட்ட, ப்ளீச் செய்யப்பட்ட மற்றும் சுவையூட்டப்பட்ட) செயல்முறைக்கு உட்படாத, சுகாதாரமான, உயர்தர தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு FDT உத்தரவாதம் அளிக்கிறது.

“எங்கள் நிறுவனம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வளர்ச்சியடைந்து வெற்றியை அடைந்து வருகிறது. எங்கள் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட பாரம்பரிய தேங்காய் எண்ணெயை முன்னோக்கி எடுத்துச் செல்வதன் மூலம், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இரசாயன சுத்திகரிப்புக்கு உட்படாத இயற்கையான தயாரிப்பை வழங்குகிறோம். சர்வதேச தரத்திற்கு உற்பத்தியை உறுதிசெய்யும் வகையில் எங்களின் புதிய தொழில்நுட்பம் அளவீடு செய்யப்பட்டுள்ளதால், இரசாயன பொருட்கள் இல்லாத சிறந்த தரமான இயற்கை மற்றும் ஆரோக்கியமான தயாரிப்பை இப்போது நுகர்வோருக்கு வழங்குகிறோம்.”

“இலங்கையில் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒரே நிறுவனம் நாங்கள்தான். நாங்கள் எப்போதும் தரத்தில் கவனம் செலுத்துகிறோம், இன்று எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த தயாரிப்பை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என AadamjeeLuckmanjee & Sons இன் முகாமைத்துவப் பணிப்பாளர் முர்தசா லுக்மன்ஜீ தெரிவித்தார்.

இலச்சினை மீதான நுகர்வோர் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த, N-Joy இனால், “உண்மையான தேங்காய் எண்ணெயை அடையாளம் காணுங்கள்?” வணிகத்தால் ஆரம்பிக்கப்பட்டது, இது தயாரிப்பில் உள்ள QR குறியீடு மூலம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தர உத்தரவாதத்திற்கான அணுகலை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

“எங்கள் தயாரிப்பு மீதான வாடிக்கையாளர் நம்பிக்கை எங்களுக்கு மிகவும் முக்கியமானது. N-Joy தூய தேங்காய் எண்ணெயின் ஒவ்வொரு போத்தலிலும் உள்ள QR குறியீட்டைப் பயன்படுத்தி எங்கள் தயாரிப்பின் உண்மையான தரத்தைப் புரிந்துகொள்ள வாடிக்கையாளர்களை அழைக்கிறோம். இந்த முயற்சியின் மூலம், எங்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த நாங்கள் முயற்சிசெய்கிறோம் மற்றும் இந்த பண்டிகைக் காலத்தில் சந்தையில் மிக உயர்ந்த தரமான எண்ணெய்களை எங்கள் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு வழங்க உறுதியளிக்கிறோம்.” என N-Joyஇன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் துவிந்திர கோரயா தெரிவித்தார்.

AadamjeeLuckmanjee & Sons Groupஇன் உறுப்பினரான N-Joy இலங்கையில் ஒரு முன்னோடி உற்பத்தியாளர் மற்றும் தூய தேங்காய் எண்ணெய் ஏற்றுமதியாளர், இது இரசாயன பொருட்கள் அடங்காத உற்பத்தி செய்யப்படும் இயற்கை எண்ணெய் ஆகும். அதன் தாய் நிறுவனமான N-Joyஇன் 150 வருட அனுபவத்தால் ஈர்க்கப்பட்டு, ISO 22000 சான்றிதழுடன் நுகர்வோருக்கு தூய தேங்காய் எண்ணெயை வழங்குவதற்காக பல ஆண்டுகளாக பல விருதுகளை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles