உலகம்

அஜித்தின் அடுத்த படம் குறித்த புதிய தகவல்!

அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அஜித் நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் இயக்குனர் வினோத்துடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்பதும் இந்த படத்தையும் போனி கபூரே தயாரிக்க உள்ளார் என்பதும் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் இவர்கள் மூவர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாக உள்ள புதிய படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் பூஜை வரும் ஜனவரி 16 ஆம் திகதி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

அதோடு அதோடு இந்த புதிய படத்தில் மங்காத்தா படத்தில் போன்று அஜித் நெகட்டிவ் கேரக்டரில்  நடிக்க உள்ளாராம்.

வலிமை படம் வெளியான பின்னர் இந்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

Hot Topics

Related Articles