உலகம்

கண்டி ‘Lake Villas’ஐ வண்ணமயமான வைபவத்துடன் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்தது பிரைம் குழுமம்

 

இலங்கையின் முதல் தர மற்றும் நம்பகமான காணிகட்டிட விற்பனை மேம்பாட்டு நிறுவனமான பிரைம் குழுமம், ‘Lake Villas’ என்ற மற்றொரு தனித்துவமான, இயற்கையால் ஈர்க்கப்பட்ட சொகுசு வாழ்க்கை அனுபவத்தை நிறைவு செய்ததை சமீபத்தில் வைபவ ரீதியாக கொண்டாடியது; இலங்கையின் மலையகத் தலைநகரான அழகிய கண்டி நகரத்தில் உள்ள Dambarawa ஏரியின் ஊசியிலையுள்ள பச்சைக் கரையில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டடக்கலை ரீதியாக தனித்துவமான படைப்பாகும். 17 டிசம்பர் 2021 திகதி அன்று இந்த புதிய சொகுசு வீடுகளின் உரிமையாளர்களுக்கு அதன் சாவிகள் வழங்கப்பட்டதுடன், 34 பெருமைமிக்க வீட்டு உரிமையாளர்களுக்கு நேர்த்தியான, பிரத்தியேகமான மாலைநேர விருந்துபசாரமும் மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Lake Villas Dambarawa என்பது, கண்டி சிட்டி சென்டரிலிருந்து குறுகிய தூரத்தில் அமைந்துள்ள ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ள தனியார், நுழைவாயில் நிலப்பரப்பில், 20 பேர்ச்சஸில் இருந்து ஆரம்பித்து, விசாலமான அடுக்குகளில் அமைக்கப்பட்டுள்ள 34 ஆடம்பரமான மற்றும் நேர்த்தியான குடியிருப்பு வீட்டுத்தொகுதியின் தனித்துவமான வளர்ச்சியாகும். தேயிலை தோட்டங்கள், அற்புதமான நீர்வீழ்ச்சிகள், விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் உடவத்தகெலே சரணாலயம் ஆகியவற்றால் நிறைந்த பசுமையான மலைத் தொடர்கள் கொண்ட காட்சிகளுடன் காணப்படுகின்றது,

“எங்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ள எங்களின் தனித்துவமான மற்றும் ஆடம்பரமான தனிநபர் வீட்டுத் திட்டங்களில் ஒன்றாக, Lake Villas Dambarawa நிறைவு செய்யப்பட்டதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இலங்கையில் இது போன்ற உயர் பெறுமதிமிக்க செயற்திட்டங்களை ஆரம்பிப்பதில் இருந்து வெற்றிகரமான கையளிக்கும் வரையிலான செயற்திட்டங்களை காணக்கூடிய ஒரு சில உயர்தர நிறுவனங்களில் ஒன்றாக இருப்பதில் நாம் பெருமையடைகிறோம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரைமில், நாங்கள் அடிக்கல் நாட்டு விழாவிலிருந்து முதலீட்டாளர்கள் கையில் ஒப்படைக்கும் இறுதிக் கட்டம் வரை நாம் அதிக கவனம் செலுத்துகிறோம். இன்று, எங்களது 29 தனிநபர் வீட்டுத் திட்டங்களில் 50%க்கும் அதிகமானவற்றை நிறைவு செய்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம், இது எங்கள் வாடிக்கையாளர்களை எங்களின் மிகப்பெரிய பிராண்ட் தூதுவர்களாக மாற்றுகிறது. இது எங்கள் அனுபவம், நிபுணத்துவம் மற்றும் எங்கள் நம்பகமான வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்க்கை அனுபவங்களை மட்டுமே வழங்குவதற்கான மிக உயர்ந்த அர்ப்பணிப்புக்கு சான்றாகும்.” என பிரைம் குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மணகே குறிப்பிட்டார்.

“Lake Villas என்பது அழகான தலைநகரான கண்டியில் மறைந்திருக்கும் தனித்துவமான ரத்தினம் போன்ற வாழ்க்கைமுறையில் செய்யப்பட்ட முதலீடு ஆகும். ஒவ்வொரு வீடும் நவீன வசதிகளுடன் கூடிய சமநிலையான வாழ்க்கைப் பகுதிகள், அழகான வெளிப்புற இடங்கள் மற்றும் நன்கு இளைப்பாறுவதற்கு ஏற்ற இடமாகவும், மலையக தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் அமைதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பசுமையான காட்சிகளும் உள்ளன. தம்பராவ ஏரிப் பகுதியே அல்பைன் போன்ற வளிமண்டலத்தையும், அற்புதமான நிலப்பரப்புகளையும், அதன் காடுகளால் சூழப்பட்ட அமைதியையும் கொண்டுள்ளது, இது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க சரியான இடமாக அமைகிறது. பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் நிறைந்த எங்களின் தனித்துவமான கட்டுமான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

கவர்ச்சிகரமான கட்டிடக்கலை, தேக்கு மற்றும் மஹோகனி கதவுகள், முழுமையாக பொருத்தப்பட்ட சமையலறைகள் மற்றும் குளியலறைகள், குளிரூட்டி மற்றும் மர படிக்கட்டுகள் ஆகியவை ஒவ்வொரு ‘Lake Villas’ வீட்டையும் ஒரு ஆடம்பரமான அனுபவமாக மாற்றுகின்றன. கூடுதலாக, அதன் குடியிருப்பாளர்களின் தினசரி அனுபவத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு பாதுகாப்பு, வீட்டுக்கு வீடு மற்றும் வசதிகளை வழங்குகிறது. இதில் 24 மணி நேர பாதுகாப்பு, நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், அழகிய நடைபாதை, சமூக ஒன்று கூடம், குழந்தைகள் விளையாட்டு மைதானம் மற்றும் 40 அடி அகலமான ஏரி ஆகியன இதில் அடங்கும்.

Lake Villas Dambarawa கண்டியில் பிரைம் குழுமத்தின் முதலாவது வெற்றிகரமான வீடமைப்பு முயற்சியைக் குறிக்கிறது, அதைத் தொடர்ந்து திகன – Scottish Island ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட 28 சொகுசு விடுமுறை வில்லாக்களின் விதிவிலக்கான தொகுப்பாகும். விக்டோரியா ஏரியின் அழகைக் ரசிக்கும் விதமாக மத்திய மலை பிரதேசங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் திகனா – Scottish Islands உள்ள உல்லாச குடிசைகள் கட்டிடக்கலை ரீதியாக ஈர்க்கப்பட்டு கண்டியின் குளிர்ந்த தட்ப வெப்ப நிலைகளுக்கு ஏற்றவாறு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்டிப் பிராந்தியத்தில் வேரூன்றியவர்கள், 2024ஆம் ஆண்டில் நிர்மாணப்பணிகள் நிறைவடையவுள்ள, மூன்று மற்றும் நான்கு படுக்கையறைகள் கொண்ட சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட வில்லாக்களுக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

பிரைம் குழுமம் ‘பூமியில் ஒரு சிறந்த இடத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளது’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் முன்னோக்கிச் செல்கிறது. இன்றுவரை, குழுமம் 30 தனிப்பட்ட வீட்டுத் திட்டங்கள், நாட்டில் 18 மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள காணித் திட்டங்கள் மற்றும் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள 41 அடுக்குமாடித் திட்டங்களின் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரைம் குழுமம்

இலங்கையின் காணி கட்டட விற்பனை துறையில் சர்வதேச கடன் தரமான ICRA [A-] நிதி நிலைத் தன்மையைப் பெற்ற ஒரேயொருரு குழுமமான பிரைம் குழுமம் காணி மற்றும் கட்டட மேம்பாட்டுத் துறையில் சுமார் 25 வருடகால அனுபவத்தைக் கொண்ட முழுமையான இலங்கை வர்த்தக குழுமமாகும். பிரைம் குழுமம் LMD சஞ்சிகையினால் 2019 ஆண்டில் நாட்டின் வர்த்தகங்கள் மத்தியில் கௌரவமான வர்த்தக நாமங்கள் அடங்கிய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. அத்துடன் பிரைம் குழுமத்தின் தலைவர் மற்றும் அதன் துணை தலைவி ஆகியோரை LMD சஞ்சிகையினால் 2019ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த 100 வர்த்தகங்களைச் சேர்ந்த ‘Realty Visionary’ and ‘Power Woman’இனால் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், பிரபலமான PropertyGuru Asia Property Awards விருது வழங்கும் நிகழ்வில் ‘Best Developer’ மற்றும் ‘Best Luxury Condo Development’ என்ற விருதுகளையும் வெல்வதற்கு பிரைம் குழுமத்திற்கு முடிந்தது. Asia One சஞ்சிகையினால் கௌரவிக்கப்படும் ஆசியாவின் விசேட இலச்சினைகளுக்குள் இடம்பிடித்துள்ளதுடன் 2018ஆம் ஆண்டு இலங்கைகயில் சிறந்த தொழில்முனைவோர் என்ற அந்தஸ்தையும் பிரைம் குழுமம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Hot Topics

Related Articles