உலகம்

முடிவுக்கு வந்தது பிளாக்பெர்ரி சகாப்தம்!

பிளாக்பெர்ரி (Blackberry ) os கைதொலைப்பேசிகள் இன்று முதல் தனது வாடிக்கையாளர் சேவைகளை நிறுத்திக்கொள்வதோடு (ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல்) நம்பகத்தன்மையுடன் இயங்காது என நிறுவனம் அதன் உத்தியோகபூர்வமான வலைதளத்தில் அறிவித்துள்ளது.

பிளாக்பெர்ரி (Blackberry ) os கைதொலைப்பேசிகள் இன்று முதல் தனது வாடிக்கையாளர் சேவைகளை நிறுத்திக்கொள்வதோடு தற்போதைய பிளாக்பெர்ரி கைதொலைப்பேசிகளில் குறிப்பிடத்தக்க சேவைகளை 2022ம் ஆண்டு முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. எனவே இன்று முதல் ( ஜனவரி 4 ) கைதொலைப்பேசிகளை நெட்வொர்க்குகளுடன் இணைக்க முடியாது.

சில ஆண்டுகளுக்கு முன்பு கீபோர்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிளாக்பெர்ரி கைதொலைப்பேசிகள் நல்ல வரவேற்பை பெற்றன.

அதன்பின்னர் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் பிளாக்பெர்ரி போன்கள் சந்தையில் சரிவை சந்தித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த பயன்பாட்டை நிறுத்த போவதாக கூறிய நிலையில் ஒரு சில யூசர்களுக்காக நாட்களை நீட்டித்தது.

இந்த அறிவிப்பு ஆண்ட்ராய்டை அடிப்படையாக கொண்டு இயங்கும் பிளாக்பெர்ரி போன்களுக்கு பொருந்தாது என்றும் கூறியுள்ளது. வரும் ஜனவரி 4 முதல் பிளாக்பெர்ரி 7.1 OS, பிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி OS 2.1 உள்ளிட்ட வெர்ஷன்கள் இனிமேல் நம்பகத்தன்மையுடன் செயல்படாது என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் அறிவித்துள்ளது.

அதாவது செல்லுலார்(cellular) அல்லது wifi உதவியுடன் இயங்கும் பிளாக்பெர்ரி போன்களில் அழைப்புகள், குறுஞ்செய்தி அனுப்புதல், அவசர அழைப்பு எண்ணான 911 பயன்படுத்த முடியாது, கேஜெட்டுகள் இறுதியில் வேலை செய்வதை நிறுத்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இணையதளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், போன்களில் அப்டேட்டுகள் வழங்குவது குறித்தும் இனி பதிலளிக்காது என்று கூறியுள்ளது.

2013ம் ஆண்டில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS கவரும் வகையில் BlackBerry 10 போனை அறிமுகப்படுத்தியது. பின்னர் இறுதியாக இந்த நிறுவனம் 2015ல் புதிய ஸ்லைடர் போனாக BlackBerry Priv வெளியிட்டது.

2016-ல் BlackBerry உலக சந்தையில் தனது பெயரை நிலைநாட்ட TCL கம்யூனிகேஷன் மற்றும் இந்தியாவில் Optiemus Infracom உள்ளிட்டவைகளுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இந்த முயற்சிகளும் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தற்போது பிளாக்பெர்ரி சகாப்தம் முடிவுக்கு வந்ததுள்ளது.

Hot Topics

Related Articles