உலகம்

“சமையல் எரிவாயு கொள்கலன்களில் செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளது” உறுதியாக கூறுகிறது எதிர்க்கட்சி!

இலங்கையில் அண்மைகாலமாக அதிகரித்துள்ள சமையல் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பு சம்பவங்கள் நாட்டில் பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளன.

சமையல் எரிவாயு கொள்கலன்களி ஏதாவது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக என்ற சந்தேகங்கள் பொது மக்களிடையே அதிகரித்துள்ளது. எனினும் இதனை அரசும் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனமும் மறுத்து வருகின்றன.

இந்த நிலையில் சமையல் எரிவாயு கொள்கலன்களில் செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளமை கனியவள கூட்டுதாபனத்தின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (29) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் பியூட்டேன் மற்றும் ப்ரோப்பேன் என்பன 51:49 என்ற விகிதத்தில் அடங்கியுள்ளமை உறுதியாகியுள்ளது.

இது ஒரு பாரதூரமான பிரச்சினை எனவும் அந்த அறிக்கையை விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை நிராகரித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நுகர்வோர் அதிகார சபையின் கோரிக்கைக்கு அமைய குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் அதனை வெளியிடுவதற்கான அதிகாரம் தமக்கில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Hot Topics

Related Articles