உலகம்

ஆசிய வங்கி மற்றும் நிதி விருதுகள் – 2021இல் சிறந்த சந்தைப்படுத்தல் மற்றும் இலச்சினை அணுகுமுறைக்காக அங்கீகரிக்கப்பட்ட HNB FINANCE,

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, 2021 ஆசிய வங்கி மற்றும் நிதி விருதுகளில் (ABF மொத்த விற்பனை மற்றும் சில்லறை வங்கி விருதுகள் 2021) தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் ‘Sri Lanka Outstanding Marketing and Branding Approach விருதை அண்மையில் வென்றது

ABF விருதுகளில் இந்த அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கையின் ஒரே வங்கி அல்லாத நிதி நிறுவனமாக HNB FINANCE PLC உள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆசிய வங்கி மற்றும் நிதி விருது வழங்கும் நிகழ்வில் இரண்டாவது தடவையாக ஆன்லைனில் (டிஜிட்டல் விருது வழங்கும் விழாவாக) நடைபெற்றது மற்றும் ஆசியாவின் பல முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டன.

கடந்த காலத்தில், HNB FINANCE ஆனது ஆன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு வெற்றிகரமான சந்தைப்படுத்தல் மற்றும் இலச்சினை மேம்பாட்டு திட்டங்களைச் சாதித்து வாடிக்கையாளர்களைச் சென்றடைய முடிந்தது. இந்த ஒவ்வொரு மேம்பாட்டு நடவடிக்கைகளின் மூலமாகவும், நிறுவனத்தால் தெளிவான வணிக செயற்பாடுகளை புத்தாக்க மற்றும் அந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சிறப்பு மற்றும் தனித்துவமான டிஜிட்டல் சேவைத் திறன் ஆகியவற்றின் மூலம் அடைய முடிந்தது.

“ஆசிய பிராந்தியத்தில் முன்னணி நிதி நிறுவனமாக HNB FINANCE மீண்டும் ஆசிய வங்கிகள் மற்றும் நிதி விருதுகளில் அங்கீகாரம் பெற்றதன் மூலம் நிறுவனத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. 

உலகெங்கிலும் உள்ள துரிதமான வளர்ச்சிக்கு ஏற்ப எங்கள் வாடிக்கையாளர்களும் விரிவான மற்றும் புத்தாக்கமான நிதிச் சேவைகளை அனுபவிப்பதை உறுதி செய்வதில் எங்கள் முதலீடுகளின் தரத்திற்கு இந்த சாதனை ஒரு சான்றாகும்.” என HNB FINANCE PLCஇன் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதானி உதார குணசிங்க தெரிவித்தார்.

ABF மொத்த மற்றும் சில்லறை வங்கி விருதுகள் 2021 தொடர்ந்து 10வது ஆண்டாக நடைபெற்றது, இது ஆசிய பிராந்தியத்தில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சிறந்த சேவைகள், திட்டங்கள், பரிவர்த்தனைகள் மற்றும் முன்முயற்சிகளை அங்கீகரித்துள்ளது.

Ernst and Youngஇன் ஆசிய பிராந்திய முகாமைத்துவ பங்குதாரரான Liew Nam Soon, Deloitte & Touche LLPஇன் பங்குதாரரான, பிரதானி மற்றும் நிதி சேவைகள் SEA & Singapore இன் Ho Kok-Yong, PwC இன் APAC நிதிச் சேவைகளின் பிரதானி John Dovaston மற்றும் KPMG International இன் Fintech நிதி சேவைகள் ஆலோசகரும் உலகளாவிய இணை பிரதானி மற்றும் பங்குதாரர், Anton Ruddenklau ஆகியோர் இந்த நிகழ்வில் துறைசார் நிபுணர்கள் குழுவில் இணைந்திருந்தனர்.

 

 

 

 

 

 

 

Hot Topics

Related Articles