உலகம்

ALLIANZ INSURANCE மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவி

 

இலங்கையின் முதற்தர காப்புறுதி வழங்குனரான Allianz Insurance Lanka Limited, மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய வளங்களை வழங்க முன்வந்துள்ளது.

சமூக சுகாதாரம் மற்றும் நல்வாழ்வைப் பேணுவதற்கு மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை வழங்கும் முக்கியத்துவத்தை உணர்ந்த Allianz நிறுவனத்தின் பேணியலுகை குழுவானது, நோயாளிகளுக்கான சிறந்த சேவைகளையும் மருத்துவ சிகிச்சைகளையும் வழங்குவதை உறுதிசெய்வதற்கான மருத்துவமனையின் தேவைப்பாடுகளைக் கண்டறிந்து குறிப்பிட்டுள்ளது. மாத்தறை நகரிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலை, நாளாந்தம் சுமார் 1,000 நோயாளிகளுக்கு தனது சேவைகளை வழங்குகின்றது.

கோவிட்-19 தொற்றுநோயானது நாடு முழுவதும் உள்ள குடிமக்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்தும் கணிசமாக பாதிக்கின்றதோடு உள்ளூர் சுகாதார அமைப்புகள் மற்றும் மருத்துவ வளங்களின் மீதான அழுத்தத்தை கடுமையாக அதிகரித்துள்ளது. மேலும், இந்நிலை காரணமாக அதிகமான மக்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதோடு, பலருக்கு தொடர்ச்சியான சுகாதார பராமரிப்பும் தேவைப்படுகிறது. காப்புறுதி வழங்குநர் என்ற ரீதியில், Allianz நிறுவனம், சமூகங்களுக்கு சேவை செய்வதிலும், மக்களை பலப்படுத்துவதிலும் பெருமை கொள்கின்றது. அதன் அடிப்படையில், மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நன்கொடை அளிப்பதன்மூலம் உதவிக்கரம் நீட்டுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைகின்றது.

வைத்தியசாலைக்கு ரூ. 2 மில்லியன் வழங்குவதற்காக ஒழுங்குசெய்யப்பட்ட இந்நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவம் சார்பாக அதன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மங்கள பண்டார, சந்தை முகாமைத்துவத்தின் உதவிப் பொது முகாமையாளர் சமந்த குணவர்தன ஆகியோரும் Allianz Lanka நிறுவனத்தின் பல பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் திருமதி எம்.டபிள்யூ.எம்.கே.மெதிவக்க, பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் திரு. ஆர்.எம்.யு.கே ரத்நாயக்க உட்பட மருத்துவமனையின் முக்கிய பிரமுகர்கள், மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) மாத்தறை மாவட்டத்திற்கான  செயலாளர், வைத்தியர் சுரங்கிகா ஜயவிக்ரம, மற்றும் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர், வைத்தியர் சுஜித் ஜயதுங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வைத்தியசாலைக்கு நன்கொடை வழங்கியமை குறித்து கருத்து தெரிவித்த Allianz நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி, மங்கள பண்டார, “Allianz Insurance Lanka, மாத்தறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அத்தியாவசிய செயற்பாட்டு உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் தேசிய சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் அளவுகடந்த பெருமை கொள்கிறது. சமூக நன்மதிப்பை உருவாக்குவதற்கும், நாடு முழுவதும் உள்ள குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் Allianz கொண்டுள்ள குறிக்கோளினை இந்த நன்கொடை காட்டுகிறது. மேலும், இந்த நன்கொடையானது, தற்போதைய தொற்றுநோய் காலத்திலும் நாட்டை கட்டிக்காக்கும் முயற்சிகளில் ஈடுபடும் உள்நாட்டு சுகாதாரத் துறைக்கு Allianz நிறுவனத்தின் நன்றியையும் பிரதிபலிக்கிறது.”

Allianz ஆனது உலக அளவில் தரப்படுத்தப்பட்ட முதலீட்டு தீர்வுகளை, உள்நாட்டு அறிவு மற்றும் நிபுணத்துவத்துடன் வழங்குகிறது. கடந்த 130 ஆண்டுகளாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் நிதி மற்றும் ஓய்வூதிய இலக்குகளை அடைய உதவிய மரபினை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. Allianz இன் தயாரிப்புக்கள் மற்றும் சேவைகள்  இன்றைய தேவைகள் நிறைந்த வாழ்க்கை முறைகள் மற்றும் நிதிச் சவால்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாது, அவற்றுக்கு அப்பாலும் வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கின்றது.

Hot Topics

Related Articles