உலகம்

பண்டிகைக் காலத்துக்காக புதிய மெருகேற்றங்களுடன் Crescat Boulevard மீளத் திறப்பு

(முழுமையான மறுசீரமைப்பு பணிகளைத் தொடர்ந்து Crescat Boulevard மீளத் திறந்து வைப்பு)

பண்டிகைக் கால ஷொப்பிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், புதிய மெருகேற்றங்களுடன் Crescat Boulevard மீளத் திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரில் மையப்பகுதியில், 2021 நவம்பர் 19 ஆம் திகதி மீளத்திறக்கப்பட்ட இந்த ஷொப்பிங் தொகுதியில், மேம்படுத்தப்பட்ட உள்ளக அலங்காரங்கள், புதிய ஷொப்பிங் அனுபவம் மற்றும் உணவருந்தும் அனுபவம் போன்றன அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறைவேற்று உப தலைவரும், ஜோன் கீல்ஸ் புரோப்பர்டீஸ் பிரிவுத் தலைவருமான நயன நாவில்மட கருத்துத் தெரிவிக்கையில், “நகர மையத்தில் காணப்படும் முன்னணி ஷொப்பிங் பகுதிகளில் முன்னோடி எனும் வகையில் Crescat Boulevard, கடந்த 24 வருட காலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் இனிய நினைவுகளை ஏற்படுத்துவதில் பங்களிப்பு வழங்கியுள்ளது. புனரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதைத் தொடர்ந்து, கொழும்பின் ஷொப்பிங் நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு சிறந்த, புத்துணர்வான உயர் ஷொப்பிங் மற்றும் உணவக அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் உதவித் தலைவர் மற்றும் சொத்துக்கள் முகாமைத்துவ தலைமை அதிகாரி தீக்சன ஜயரத்ன

தொற்றுப் பரவலுடனான சவால்கள் நிறைந்த சூழலிலும் புனரமைப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன. பண்டிகைக் காலத்தை வரவேற்கும் வகையில் நாம் சகல வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். எம்மீது எமது விற்பனையகங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நாம் மதிப்பதுடன், சிலர் Crescat Boulevard உடன் 20 வருடங்களுக்கு மேலாக இணைந்துள்ளனர்.

கொழும்பின் ஷொப்பிங் பகுதிகளில் எளிதில் நினைவிலிருக்கும் பகுதியாக Crescat Boulevard காணப்படுவதுடன், மாற்றமடைந்து வரும் நகரில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்த முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

கொழும்பின் முன்னணி வணிக நிலையங்களுக்கு மத்தியில் சௌகரியமாக அணுகக்கூடிய வகையில் Crescat அமைந்திருப்பதுடன், பெருமளவு தெரிவுகள் மற்றும் சிறந்த ஷொப்பிங் அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. கொழும்பில் காணப்படும் ஷொப்பிங் மோல்களில் அமைந்துள்ள மிகவும் இலகுவாக அணுகக்கூடிய சுப்பர் மார்கெட்டையும் Crescat கொண்டுள்ளது. சௌகரியமான வாகனத் தரிப்பிட வசதி மற்றும் பெருமளவு தெரிவுகளையும் கொண்டுள்ளது.

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் உதவித் தலைவர் மற்றும் சொத்துக்கள் முகாமைத்துவ தலைமை அதிகாரி தீக்சன ஜயரத்ன கருத்துத் தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு தெரிவுகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில், Crescat கவனமான முறையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

காகிதாதிகள், வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், பாதணிகள், சுற்றுலாப் பயணிகளின் நினைவுச் சுவடுகள், கூந்தல் அலங்காரம், பொருட்கள் கொள்வனவு மற்றும் வாகன பராமரிப்பு என்பவற்றுடன், உணவு அருந்துவது என எதுவாக இருந்தாலும் Crescat Boulevard இனால் சகல வசதிகளும் ஒரே கூரையின் கீழ் பல தெரிவுகளுடன் வழங்கப்படுகின்றது.” என்றார்.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தவிசாளர் கிரிஷான் பாலேந்திரா

கொழும்பு நகரின் புதிய தோற்ற அமைப்பை மாற்றியமைப்பதில் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் முன்னணியில் திகழ்கின்றது. புதிய கட்டிடங்கள் மற்றும் புதிய பகுதகிளை நிர்மாணிப்பதிலும், புதிய அனுபவங்களை ஏற்படுத்துவதிலும் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. Crescat Boulevard இன் மீளறிமுகம் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் போன்றன நகரின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளன.

நத்தார் பண்டிகை மற்றும் பண்டிகை விடுமுறை காலம் நெருங்கும் நிலையில், கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, Crescat Boulevard பருவ காலத்துக்காக தன்னை தயார்ப்படுத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்ட சொப்பிங் மற்றும் உணவருந்தும் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக சுற்றுலாப் பயணிகளை மீள வரவேற்பதுடன், பல பருவகால செயற்பாடுகளையும், ஊக்குவிப்பு மற்றும் விற்பனை பகுதிகளையும் வாடிக்கையாளர்களுக்காக கொண்டுள்ளது.

 

CRESCAT BOULEVARD இல் அமைந்துள்ள விற்பனையகங்கள்

Lobby Level                              Ground Level                            Basement Level

Sugar Bistro                             Headturners                               Keells Supermarket

Yoland Collections                      Footrub                                         Thai Express

Fullstop                                    Swarovski                                  Ichiban Japanese Foods

Dilly’s Fashions                         Benares                                         Roots

CARATS                                 Shopping girl                                Royal Cashew

Mlesna Tea                          The Dunstans Barbers                    Nations Trust Bank

Rancrisp Cashew                  Kleenpark car wash                         Exclusive Lines

Parfumarie                             Dilmah Tea                                    W A De Silva

Spa Ceylon                           Kadapatha Clothing                                Carlo

Vision Care                      Gerard Mendis   Chocolatier                 Chamathka Jewellers

 

 

Hot Topics

Related Articles